இந்த காலத்தில் நோயின்றி வாழ்வது என்பது அதிசயமான விஷயமாகும்.உடலில் ஏதேனும் ஒரு குறைபாட்டுடனே அனைவரும் வாழ்ந்து வருகின்றோம்.இதில் உடல் பருமன் பிரச்சனை பெரியவர்கள்,சிறியவர்கள் என்று அனைவரையும் பாதிக்கிறது.
ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்க வழக்கங்கள் உடலில் கெட்ட கொழுப்பு அதிகம் சேர்வதை ஊக்குவிக்கிறது.இது கொலஸ்ட்ரால்,ஹார்ட் அட்டாக்,நீரிழிவு போன்ற நோய் பாதிப்புகள் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது.
இதனால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள பலரும் டயட் அதாவது உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுகின்றனர்.சிலர் குறைவான தினங்களில் அதிகளவு உடல் எடையை குறைக்க எண்ணி ஆபத்தான உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றுகின்றனர்.
கீட்டோ டயட்,வாட்டர் டயட் என பல வகை டயட் முறை இருக்கிறது.இந்த டயட்களை சரியான முறையில் பின்பற்றவில்லை என்றால் நிச்சயம் உயிருக்கு ஆப்பதாகவிடும்.சாமீபத்தில் 18 வயது மாணவி ஒருவர் உடல் எடை அதிகரித்துவிடுமோ என்று அஞ்சி எடையை குறைக்க நினைத்து வாட்டர் டயட் முறையை பின்பற்றிய நிலையில் திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் வாட்டர் டயட் ஆபத்தா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழத் தொடங்கி இருக்கிறது.இந்த வாட்டர் டயட் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கிறது.தண்ணீர் விரதத்தை சரியாக கடைபிடித்தால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும்.
கல்லீரலில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்க வாட்டர் டயட் பின்பற்றலாம்.ஆனால் வாட்டர் டயட் என்ற பெயரில் உணவு எதுவும் உட்கொள்ளலாமல் இருந்தால் உணவுக்குழாய் சுருங்கி நமக்கு உயிரிழக்க நேரிடும்.வாட்டர் டயட் மட்டுமின்றி எந்த ஒரு டயட் பின்பற்றுபவரும் சில விஷயங்களை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
முதலில் ஆரோக்கியமான உணவுமுறையை கடைபிடிக்க வேண்டியது முக்கியம்.ஹோட்டல் உணவுகளை தவிர்க்க வேண்டும்.பதப்படுத்தபட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.நீங்கள் உட்கொள்ளக் கூடிய ஆரோக்கிய உணவுகளை பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.மூன்றுவேளை உணவை 4,5 அல்லது 6 வேளையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பழங்கள் மற்றும் காய்கறிகளை போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.டயட் இருக்கும் சிலர் பசியை கட்டுப்படுத்த முடியாமல் அதிகமாக சாப்பிட்டுவிடுகின்றனர்.எனவே இந்த பிரச்சனை இருப்பவர்கள் குறைந்த கலோரி உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.