தாயுடன் தாகத உறவு! திமுக பிரமுகர் செய்த காரியம்!

Photo of author

By Rupa

தாயுடன் தாகத உறவு! திமுக பிரமுகர் செய்த காரியம்!

நாமக்கல் அருகே சேந்தமங்கலம் பகுதியில் உத்திரகிடிகாவல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்.இவருக்கு வயது (35).இவருக்கு பிரியா என்ற மனைவியும்,ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.திமுக பிரமுகரான இவர் ஊராட்சி மன்ற 7 வது வார்டு உறுப்பினராக உள்ளார்.அதுமட்டுமின்றி அப்பகுதியின் டேங்க் மற்றும் அரசு கேபிள் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார்.

சேந்தமங்கலம் பகுதியில் மலைவேப்பன்குட்டையை சேர்ந்தவர் சங்கர்.இவரது மனைவி சசி.இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவரது கனவரை  பிரிந்து தன் மகன்களுடன் வாழ்ந்து வருகிறார்.சசி என்பவருக்கும் உத்திரகிடிகாவல் பகுதியில் வசிக்கும் திமுக பிரமுகர் ஆறுமகம் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.இதை அறிந்த சசியின் மூத்த மகன் தன் தாய் மற்றும் திமுக பிரமுகர் ஆறுமுகத்தையும் பலமுறை கண்டித்துள்ளார்.

இருவரும் அதை காதினிலே போட்டுக்கொள்ளாத நிலையில் மீண்டும் பழகி வந்துள்ளனர்.அதிகம் கோவமடைந்த சசியின் மூத்த மகன்,ஆறுமுகம் மற்றும் அவரது நண்பர் இருவரும் மோட்டார் வண்டியில் வந்துக்கொண்டிருந்தனர்.அப்போது சசியின் மூத்த மகன் கட்ச்சிபினால் முகத்தை மூடிக்கொண்டு ,தான் கொண்டுச்சென்ற அரிவாளால் ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டி வீழ்த்தினார்.

இதனைக்கண்ட அவரது நண்பர் ஆறுமுகத்தை வெட்டியதை பார்த்ததும் தெரித்தோடி விட்டார்.அதன் பின் ஆறுமுகம் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.அதன்பின் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ஆறுமுகம் சடலமாக மீட்கப்பட்டு அரசு மருத்துமனையில் உடற்கூர் ஆய்விற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.இதற்கிடையே தலைமறைவாக இருந்த சசியின் மூத்த மகனை போலீசார் பிடித்தனர்.அவர் மீது வழக்கு பதிவு செய்து திவீரமாக விசாரித்து வருகின்றனர்.