சென்னையில் அதிகாலைக் காட்சிகள் இலலாமல் ரிலீஸ் ஆகும் திருச்சிற்றம்பலம்

Photo of author

By Vinoth

சென்னையில் அதிகாலைக் காட்சிகள் இலலாமல் ரிலீஸ் ஆகும் திருச்சிற்றம்பலம்

தனுஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகிறது.

தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக படங்கள் ரிலீஸ் ஆக காத்திருக்கும் நிலையில் இன்று திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தில் தனுஷுடன் பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா , நித்யா மேனன், பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் மூலம் ஐந்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் தனுஷ் மற்றும் அனிருத் காம்பினேஷன் இணைந்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் பாடல்களை தனுஷே எழுதியுள்ளார். வெளியான பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

தனுஷ் நடிப்பில் வெளியான ஜாலியான படங்கள் வரிசையில் இந்த படமும் இணைந்துள்ளது. படத்தில் தனுஷின் தந்தையாக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். இருவருக்கும் இடையே நடக்கும் மோதல் மற்றும் பாசப் போராட்டமே கதைக்களமாக இருக்கும் என தெரிகிறது. தனுஷுக்கு தாத்தாவாக பாரதிராஜா நடித்துள்ளார்.

இன்று இந்த படம் வெளியாகிறது. இந்நிலையில் சென்னையில் அதிகாலைக் காட்சிகள் இந்த படத்துக்காக திரையிடப்படவில்லை. வழக்கமாக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அதிகாலை 4 மணிக் காட்சிகள் திரையிடப்படும். அனால் கடைசியாக வெளியான விருமன் படத்துக்கும் திருச்சிற்றம்பலம் போல அதிகாலைக் காட்சிகள் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.