இனி இந்த சேவையை பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம்! வெளியான அதிரடி அறிவிப்பு!

0
114

இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் ஆதார் அட்டைகளை விநியோகம் செய்து வருகிறது. மத்திய, மாநில, அரசுகளின் நலத்திட்ட உதவிகள் மானியங்கள் வங்கி சேவைகள் போன்ற பல்வேறு விதமான சேவைகளுக்கு ஆதார் எண் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்ட 99 சதவீத பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் சட்டப்பிரிவு 7ன் அடிப்படையில் ஆதார் அட்டை பெறாதவர்கள் அரசு வழங்கியிருக்கின்ற மற்ற அதிகாரப்பூர்வ அடையாள அட்டை மூலமாக சேவைகளை பெறுவதற்கு தற்போது வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அரசாங்க மானியங்கள் மற்றும் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் எண் அல்லது பதிவு சீட்டை தாங்கள் வைத்திருக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கடந்த வாரம் அனைத்து மத்திய, மாநில, அரசுகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறது.

அதேபோல மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு நலத்திட்டங்கள், மானியங்கள் மற்றும் சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த உதவிகளை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் சில குறிப்பிட்ட சான்றிதழ்களை அரசிடமிருந்து பெற வேண்டும். அந்த சான்றிதழ்களை பெறுவதற்கு ஆதார் எண் அல்லது விண்ணப்ப ஒப்புகை சீட்டு இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நடுவே ஆதார் எண் உள்ளிட்டவற்றை வெளிப்படையாக தெரிவிப்பதன் மூலமாக தாங்கள் தொடர்பான தனிப்பட்ட தகவல்கள் வெளியே கட் செய்வதை சிலர் விரும்பவில்லை. இதனை எதிர்கொள்வதற்கு வி ஐ டி என்று சொல்லக்கூடிய விர்ச்சுவல் ஐடென்டிஃபையர் என்ற சேவையை சமீபத்தில் யூ ஐ டி ஏ ஐ அறிமுகப்படுத்தியது. அதனடிப்படையில், ஆதார் எண் இருப்பவர்கள் இணையதளம் மூலமாக தங்களுடைய 12 இலக்கு ஆதார் எண்ணை பதிவு செய்தால் அவர்களுக்கு 16 இலக்க தற்காலிக எண் வழங்கப்படும். இந்த எண்ணை தெரிவித்து பயனாளர்கள் சேவைகளை பெற்று கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் சில சமூக நலத்திட்ட உதவிகள் எந்த விதமான சிக்கலுமின்றி செயல்பட முழுமையான ஆதார் எண் அவசியம் என்பதால் தொடர்புடைய துறைகள் மட்டும் பயனாளிகளிடம் முழுமையான ஆதார் எண்ணை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.