திருகார்த்திகை தீபம் கொடியேற்றத்துடன் திருவண்ணாமலையில் துவங்கியது!!

Photo of author

By Vinoth

திருவண்ணாமலையில் சித்தர்கள் கூற்றுப்படி, ‘கிரிவலம்’ என்பது பக்திபூர்வமாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டிய ஒன்று பக்தர்கள் மலை வலம் வரும் நாளில்,  நீராடி, தூய்மையான ஆடையை அணிந்துகொண்டு, திருநீறு அணிந்து, வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல், இறைசிந்தனையோடு மட்டுமே செல்லவேண்டும். உலகில் வாழும் அனைவரும் நலமாகவாழ வேண்டுமென,  மனதில் தியானம் செய்தவாறே வலம் வரவேண்டும். ஒருவரிடமும் பேசாமல் , பிறரிடம் தானம் வாங்காமல், காலணிகள் எதுவும் அணியாமல் வெறுங்கால்களுடன் நடந்து செல்லவேண்டும்.

கிரிவலப் பாதையான 14 கி.மீ  தூரத்தை பக்தர்கள் நடந்துதான் கடக்க வேண்டும். இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். நமசிவாய மந்திரத்தை உச்சரித்தபடியோ, சிவபுராணத்தை பாராயணம் செய்தபடியோ கிரிவலம் வரவேண்டும். இன்றும் திருவண்ணாமலையில் சித்தர்கள் சூட்சும வடிவில் வலம் வருவதாகக் கூறப்படுகிறது. பௌர்ணமி நாள் அன்று மட்டும்தான் கிரிவலம் வரவேண்டுமா? வருடத்தின் 365 நாளும் மலை வலம் வரலாம்.  ஞாயிற்று கிழமை – சிவலோக பதவி கிட்டும்.

மேலும் இன்று  கார்த்திகை தீபத் திருவிழா இன்று (டிச.,04) கொடியேற்றத்துடன் துவங்கியது. தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார் கொடியேற்றினார். மேலும் வருகிற டிசம்பர் 13ம் தேதி திருக்கார்த்திகை தினத்தில் காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். மகா தீபத்தை தரிசிக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதனால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.