தவெக வால் விசிக வுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்!! உடனடியாக திருமா மேற்கொண்ட தீவிர நடவடிக்கை!!

Photo of author

By Vijay

TVK: விஜய் அரசியல் பிரவேசத்தால் விடுதலை சிறுத்தை கட்சியில் புதிதாக மாற்றங்களை மேற்கொண்டு வரும் திருமாவளவன்.

விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பிரவேசித்தால் பல கட்சிகளும் தேர்தல் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 234 தொகுதிகளில் உள்ள மாவட்ட செயலாளர்களின் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் திருமாவளவன்.

234 தொகுதியில் உள்ள மாவட்ட செயலாளர்களில் 144 தொகுதிகளில் உள்ள மாவட்ட செயலாளர்களில் எந்த மாற்றமும் இல்லை, 90 மாவட்டச் செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்படுவார் என்று விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்  நீண்ட நாட்களாக  மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு குறித்து விவாதித்து வந்தோம்.

இந்த மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு அனைவரது ஒப்புதலோடு அறிவிக்க இருக்கிறோம். தேர்தல் அடிப்படையில் கொண்டு இந்த மாற்றங்களை மேற்கொள்ள உள்ளோம். இது எங்கள் கட்சியை மேலும் வலுப்படுத்தும் அதன்படி ஏற்கனவே உள்ள 144 மாவட்ட செயலாளர்கள் அப்படியே இருப்பார்கள்.மேலும் 90 மாவட்டச் செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

புதிதாக கட்சி தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் பிரவேசத்தின் காரணமாகவே அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சி பணியில் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பாஜகவையும் திமுகவையும் எதிர்ப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.  இதனால் அனைத்துக் கட்சிகளும் அவர்களின் அரசியல் வியூகங்களை வகுத்து வருகின்றனர்.