கலெக்டர் அலுவலகத்திற்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்! இட ஒதுக்கீடு போராட்டத்தை கலாய்க்கும் திருமாவளவன் 

Photo of author

By Parthipan K

கலெக்டர் அலுவலகத்திற்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்! இட ஒதுக்கீடு போராட்டத்தை கலாய்க்கும் திருமாவளவன்

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று 40 ஆண்டுகளாக கோரிக்கையை முன் வைத்து கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் பாமகவும், வன்னியர் சங்கமும் அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பி பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வந்தார்கள்.

ஆனால் அதிமுக அரசனது வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு தர மறுத்தது. இதனால் தனி இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையை தளர்த்தி எம் பி சி பிரிவில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடுயாவது தர வேண்டும் என்ற கோரிக்கை பாமக தரப்பில் வைக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஏறக்குறைய ஏற்ற அதிமுக அரசு அவர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு தரப் போவதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 40 தொகுதிகள் தரப் போவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதற்கு இன்று வரை எந்த விதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.

இட ஒதுக்கீடு அறிவிப்பு வெளிவராத காரணத்தினால் பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வீட்டிற்கு வெளியே வந்து எந்த வித பிரச்சாரமும் செய்யாமல் வீட்டிற்குள்ளே இருந்து வாரம் ஒரு முறை இணையத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

வன்னியர்களின் இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு தமிழகத்தில் திரு சீமான் அவர்களும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அவர்களும் ஆதரவு தெரிவித்து வந்தார்கள்.ஆனால் பெரும்பாலானோர் எதிர்த்தே வருகிறார்கள்.

அரசியலில் எப்பொழுதும் பாமக கட்சியை தனக்கு எதிரி என்று நினைத்து வலம் வரும் விசிக கட்சியானது வன்னியர்களின் இட ஒதுக்கீடு போராட்டத்தை தொடர்ந்து விமர்சித்து வருகிறது.திமுகவின் கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் விசிக கட்சியானது தற்போது சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதால் அதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

அப்படி ஒரு பிரச்சாரத்தில் கலந்து கொண்ட விசிக கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் போராட்டங்களைப் பற்றியும், வன்னியர்களின் இட ஒதுக்கீடு பற்றியும் விமர்சித்து பேசியுள்ளார்.

அதில் அவர் பேசியதாவது, டாக்டர் ராமதாஸ் சொந்த சாதி மக்களை ஏமாற்றி வருகிறார் எனவும், கலெக்டர் ஆபீஸ்க்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம் கலெக்டர் ஆபீசில் தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று மனு கொடுத்தா அந்த மனுவை கிழித்து தான் போடுவார்கள், இது கூட தெரியாம வன்னியர் மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று அங்கு மனு கொடுத்து வருகிறார்கள்.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் தான் போய் பேசவேண்டும் அல்லது எடப்பாடி சட்டையையும் மோடியின் சட்டையை பிடித்து இட ஒதுக்கீடு வேண்டும் என கேட்க வேண்டும் .எடப்பாடிக்கு ராமதாஸ் விருந்து வைத்தபோதெல்லாம் இட ஒதுக்கீடு பற்றி பேசாமல் தற்போது தேர்தல் நெருங்கும் சமயத்தில் நாடகமாடுகிறார் என‌ மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திருமாவளவனின் இந்த பேச்சுக்கு பாமகவின் தொண்டர்கள் பலர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.