எனக்கு ஒரே டவுட்டாவே இருக்கு! ஆளுனர் நியமனத்தில் கதறும் திருமாவளவன்!

Photo of author

By Sakthi

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித்தை பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு புதிய ஆளுநராக முன்னாள் உளவுத்துறை அதிகாரியும் காவல்துறையில் பணிபுரிந்தவருமான ரவீந்திர நாராயன் ரவி அவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த ஆளுநர் நியமனத்திற்கு பின்னர் தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் சற்றே நடுநடுங்கிப் போய் தான் இருக்கிறது என்பது தற்சமயம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

இந்த ஆளுநர் மாற்றத்திற்கு பின்னர் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த ஆளுநர் நியமனத்தை திரும்ப பெற வேண்டும் என்று பரவலாக குரல் எழுப்பி வருகிறார்கள். ஏனென்றால் அவர் உளவுத்துறையில் பணியாற்றியவர் என்பதற்காகவும், அவர் அரசியல் ரீதியாக எந்த ஒரு அனுபவம் இல்லாதவர் ஆகவே அவருடன் பெரிய அளவில் யாரும் ரகசியம் பேச இயலாது என்பதற்காகவும், அவருக்கு தெரியாமல் மாநில அரசு எந்தவிதமான முக்கிய முடிவையும் எடுக்க இயலாது என்பதற்காகவும், தமிழகத்தைச் சார்ந்த பல அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆளுநர் நியமனம் தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தபோது தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநராக நியமனம் தொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தபோது தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு இருக்கின்ற ரவீந்திர நாராயணன் பதவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் உளவுத் துறையில் பணியாற்றிய அவரை தமிழ்நாட்டிற்கு ஆளுநராக மத்திய அரசு நியமனம் செய்திருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது என்று புதிய ஆளுநர் நியமனத்தில் திருமாவளவன் கருத்து கூறியிருக்கின்றார்.