அவர் சேகர்பாபு அல்ல செயல் பாபு! அறநிலையத்துறை அமைச்சரை பாராட்டிய முதலமைச்சர்!

0
69

முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் ஏழாம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து தமிழகத்திற்கு பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அதனை செயல்படுத்தி வருகிறார்.
அவர் செயல்படுத்தும் திட்டங்கள் ஒவ்வொன்றும் பொதுமக்களிடையே அவருடைய நன்மதிப்பை உயர செய்திருக்கிறது இதனால் தமிழகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். ஆனால் அவர் தற்போதுதான் முதன்முறையாக முதலமைச்சர் என்ற பொறுப்பிற்கு வந்திருக்கிறார். அந்த அளவிற்கு பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் அவர் ஒரு சில திட்டங்களை முன்னெடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

திமுக என்றாலே இந்துக்களுக்கு எதிரான ஒரு கட்சி என ஒரு எண்ணம் பொது மக்களிடையே இருந்து வருகிறது. இவ்வளவு நாள் இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருந்த திமுக தற்போது இந்துக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி வருகிறது. அதாவது இந்து கோயில்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது ஆனால் ஒரு காலத்தில் இந்துக்கள் கோவிலில் இருப்பது கடவுள் சிலையை அல்ல என்று கூறியதெல்லாம் ஒரு காலம் ஆனால் தற்சமயம் முதலமைச்சர் ஸ்டாலின் வேறு மாதிரியாக செயல்பட்டு வருகிறார்.

ஒருபுறம் இந்துக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி கொண்டே மறுபுறம் சிறுபான்மையினருக்கும் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார். அவருடைய திட்டம் என்னவென்று சிந்தித்தால் இதுவரையில் இந்துக்களின் விரோதி திமுக என்று இருந்த ஒரு பிம்பத்தை உடைக்க முற்படுகிறார் என்றுதான் தோன்றுகிறது. அதேசமயம் சிறுபான்மையினர் வாக்கையும் அவர் தவற விட தயாராக இல்லை. ஆகவே அவர்களையும் அரவணைத்து செல்லும் முயற்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.

இந்தநிலையில், திருவான்மையூர் மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் இருக்கின்ற 12 ஆயிரத்து 959 கோவில்களில் பணிபுரியும் ஊழியர்கள் அர்ச்சகர்கள் பாதசாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவித் தொகையை வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் ஸ்டாலின் இன்று ஆரம்பித்து வைத்தார். இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகின்றது அந்த விதத்தில் இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு விளக்கம் தந்த பின்னர் சட்டசபையில் இதுவரையில் யாரும் செய்யாத, கேள்விப்படாத 120 அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார் அதில் ஒன்று தான் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 12 1950 கோவில்களை சார்ந்த அர்ச்சகர்கள் பூசாரிகள் மற்றும் பட்டாச்சாரியர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டம் இந்தத் திட்டத்தை நான் தொடங்கி வைக்கிறேன். இதன் காரணமாக அரசுக்கு வருடந்தோறும் 13 கோடி ரூபாய் செலவாகும். இதனை நான் செலவு என்று சொல்ல விரும்பவில்லை. இதன் மூலம் 13 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வு பெறுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அதோடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு எவ்வாறு பணியாற்றுகிறார் என்று உங்களுக்கு நன்றாக தெரியும். ஆகவே அவரை சேகர்பாபு என்று அழைப்பதை விட செயல்பாடு என்றுதான் அழைக்கவேண்டும். சட்டசபையில் இந்த திட்டத்தை அறிவித்து ஒரு வார காலமே ஆகின்றது இதுவரையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவு பெறவில்லை அதற்குள்ளாகவே ஒரு திட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது என்றால் அது இந்த திட்டம் தான். எள் என்றால் எண்ணெயாக இருப்பார்கள் என தெரிவிப்பது வழக்கம் அதே போல ஆனாலும் சேகர்பாபு எல் என்று செல்வதற்கு முன்பாகவே எண்ணெயாக நிற்பவர் என கூறியிருக்கிறார் முதலமைச்சர்.

சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் 13-ஆம் தேதிக்கு பின்னர் படிப்படியாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருக்கிறது வெறும் அறிவிப்புடன் எந்த ஒரு திட்டமும் நின்றுவிடாது எல்லா திட்டங்களையும் நானே மாதம் தோறும் கண்காணிக்க இருக்கிறேன். அமைச்சர்களையும், அதிகாரிகளையும் நானே நேரடியாக கண்காணிக்க இருக்கிறேன். ஒவ்வொரு திட்டத்திற்கும் முன்னுரிமை தந்து அவை அனைத்தையும் நிறைவேற்றும் முயற்சியில் நிச்சயமாக நான் ஈடுபட இருக்கின்றேன் எல்லாத் துறைகளையும் முந்திக்கொண்டு செயல் பாபு தன்னுடைய துறை திட்டங்களை செயல்படுத்த ஆரம்பித்து விட்டார் என தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.