திருமாவளவனின் தந்தை தொல்காப்பியர் நினைவு நாளை முன்னிட்டு மலர் தூவி அஞ்சலி!!

Photo of author

By Rupa

திருமாவளவனின் தந்தை தொல்காப்பியர் நினைவு நாளை முன்னிட்டு மலர் தூவி அஞ்சலி!!
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியின் சார்பில்-கல்வித்தந்தை காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவனின் தந்தை. தொல்காப்பியர் நினைவு நாளை முன்னிட்டு-டாக்டர் அம்பேத்கர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் ஜோதி முருகன் தலைமை தாங்கினார்.
ஒன்றியசெயலாளர் ஆண்டி முன்னிலை வகித்தார்.
மாவட்டசெயலாளர் நாகரத்தினம் கலந்து கொண்டு வீரவணக்க உரையாற்றினார்.நல்லாசிரியர் ஏ.சி.சிவபாலு, நிர்வாகிகள்  தமிழன், கோமதி, தளபதி, ஆண்டவர்,மது,பிரேம்குமார்,கருப்பணன் செல்வராஜ், சையது, வெற்றிவேல், ராதாகிருஷ்ணன்உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்