பெரம்பலூரில் சாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்கள்.!! பொதுமக்கள் அதிர்ச்சி.!

Photo of author

By Vijay

திருவாச்சூரில் மீண்டும் மர்ம நபர்கள் கோயில் சாமி சிலைகளை உடைத்து அட்டூழியங்களில் ஈடுபட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் திருவாச்சூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோயிலின் துணைக் கோயிலாக பெரியசாமி, செங்கமலையார் கோயில்கள் மலையில் அமைந்துள்ளன.

இந்நிலையில் கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி பெரியசாமி கோயிலில் ஐந்திற்கும் மேற்பட்ட சிலைகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருந்தன. இதனை அடுத்து, அப்பகுதி மக்கள் கோபமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்பிறகு, போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவாச்சூர் பெரிய சாமி கோயில் சிலைகளை உடைத்தது நாதன் என்பவர் தான் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த நிலையில், மீண்டும் எட்டாம் தேதி செங்கமலதார் கோயிலில் 16 அடி உயரமுள்ள செங்கமலையார் சாமி சிலை மற்றும் ஐந்தடி உயரமுள்ள சித்தர் சிலைகள், ஐந்தடி உயரமுள்ள சிலை குதிரை, காளை மற்றும் வேட்டை நாய் உட்பட 10க்கும் மேற்பட்ட சிலைகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ந்து சாமி சிலைகள் அந்த பகுதியில் உடைக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர்.