தமிழகத்தில் பெஞ்சல் புயலின் மூலம் பல்வேறு இடங்களில் அதீத கனமழை பெய்தது. கனமழை காரணமாக திருவண்ணாமலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதனை அறிந்து கொள்ளாமல் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இருந்திருக்கிறார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த 3 சிறுமிகள் என மொத்தம் 7 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். பெஞ்சல் புயலின் போது திருவண்ணாமலையில் பலத்த மழை பெய்ததால் மலையடிவாரத்தின் கீழ் உள்ள வீடுகளின் மேல் மண் சரிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டு அந்த வீடுகள் மண்ணில் புதைந்தது.
மலை வேளையில் இந்த நிகழ்வானது ஏற்படவே உடனடியாக தீயணைப்பு துறையினர் காவல் துறையினர் என அனைவருக்கும் செய்திகள் பகிரப்பட்டு, மீட்பு படையினர் உடனடியாக அந்த இடத்தை அடைந்த போதிலும், அந்த ஏழு பேரையும் உயிருடன் மீட்க முடியாமல் அவர்களின் உடலை அடுத்த நாள் ஒவ்வொன்றாக நீக்கப்பட்ட சம்பவமானது தமிழகத்தை உலுக்கியது என்றே கூறலாம்.
இந்நிலையில் இது குறித்த நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பேட்டியளித்திருப்பதாவது :-
இன்று ஜெய்ப்பூர் செல்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் விமான நிலையம் வந்த பொழுது திருவண்ணாமலையில் நிகழ்ந்த துயர சம்பவம் குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு நடிகர் ரஜினிகாந்த அவர்கள், ” ஓ மை காட் எனக்கு தெரியாது ” என்று கூறினார். அதன் பிறகு அந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார். அதாவது படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் ரஜினிகாந்துக்கு அது தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
தமிழகத்தையே உலுக்கிய மோசமான துயர சம்பவமானது மக்கள் மனதில் இன்றளவும் நீங்காமல் வருத்தத்தை ஏற்படுத்தும் நிலையில், தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராகவும் தமிழகத்தில் ஒரு முக்கிய நபராகவும் விளங்கக்கூடிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இந்த தகவல் ஆனது தனக்கு தெரியாது எனக் கூறியிருப்பது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.