நம் முன்னோர்கள் கலங்கலான நீரை தெளிவாக்க தேற்றான் கொட்டையை பயன்படுத்தி வந்தார்கள்.தேற்றான் மரத்தில் இருந்து கிடைக்க கூடிய தேற்றான் பழம் மற்றும் கொட்டை அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தவையாகும்.
இப்பொழுது நாம் தண்ணீரை தூய்மையாக்க வாட்டர் பில்டர் பயன்படுத்துகிறோம்.ஆனால் அன்றைய காலத்தில் குடிநீரை தூய்மையாக்க தேற்றான் கொட்டையை நீரில் போட்டு வைப்பார்கள்.இது நீரில் உள்ள கழிவுகளை உறிஞ்சி சுத்தப்படுத்தி கொடுக்கும்.தேற்றான்கொட்டை நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.அது மட்டுமின்றி உடல் உபாதைகளுக்கு மருந்தாகவும் தேற்றான்கொட்டை பயன்படுத்தப்படுகிறது.
தேற்றான் கொட்டை மருத்துவ பயன்கள்:
1)சிறுநீரக தொற்று,சிறுநீரக கல் போன்ற பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்கள் தேற்றான் கொட்டையை பொடியாக்கி நீரில் காய்ச்சி குடிக்கலாம்.
2)அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை இருப்பவர்கள் தேற்றான் கொட்டை பொடியை பாலில் கலந்து குடித்தால் தீர்வு கிடைக்கும்.
3)பால்வினை நோயால் அவதியுறுவோர் தேற்றான் கொட்டை சூரணத்தை நீரில் காய்ச்சி குடிக்க வேண்டும்.
4)உடல் எடை குறைவாக இருப்பவர்கள் பசும் பாலில் தேற்றான் கொட்டை பொடியை கலந்து குடிக்கலாம்.
5)நீரிழிவு நோயாளிகள் தேற்றான் கொட்டையை பொடியாக்கி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட வேண்டும்.
6)கண் உஷ்ணம்,கண் எரிச்சல்,கண் கட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் தேற்றான் கொட்டை பொடியை இந்துப்புடன் அரைத்து கண்களை சுற்றி பற்று போடலாம்.
7)சீதபேதியை குணமாக்க தேற்றான் கொட்டை பொடியை நீரில் கலந்து குடிக்கலாம்.