இந்திரா காந்தி செய்த இந்த செயல் தான் நாட்டின் கருப்பு தினங்கள்!! பாஜக அண்ணாமலை விளாசல்!!

இந்திரா காந்தி செய்த இந்த செயல் தான் நாட்டின் கருப்பு தினங்கள்!! பாஜக அண்ணாமலை விளாசல்!! 

டெல்லி மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதை விமர்சித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

மாநிலங்களவையில் டெல்லி அவசர சட்ட திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிரானதாக 102 வாக்குகளும் பதிவாகியுள்ளது. அதிக வாக்குகள் பெற்றதால் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு நடுவில் டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. டெல்லி மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இந்த மசோதாவிற்கு கடும்கண்டனம் தெரிவித்தார்.

அதேபோல் டெல்லி சேவைகள் மசோதா நிறைவேற்றப்பட்டதுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார் அதில் அவர் தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியை  போல தரம் குறைக்கும் டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய நாள் நமது நாட்டில் மக்களாட்சியின் கருப்பு நாள் என தெரிவித்தார்.

முதல்வரின் இந்த கூற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில் பாரத பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்கள் 50 முறை மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்தது ஜனநாயகத்தின் உண்மையான கருப்பு  தினங்கள் எனக் கூறினார்.

இது பற்றி அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.