சுப நிகழ்ச்சிகளில் இடம் பெறும் முக்கிய பொருள் வெற்றிலை.இந்த இலையுடன் சுண்ணாம்பு,பாக்கு சேர்த்து மேலும் பழக்கத்தை பலரும் கொண்டிருக்கின்றனர்.சாப்பாட்டிற்கு பிறகு ஒரு வெற்றிலையை மென்று சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை முழுமையாக சரியாகும்.சாப்பிட்ட உணவு சீக்கிரம் செரிமானமாக நம் முன்னோர்கள் கண்டு பிடித்த வைத்தியம் இது.
வெற்றிலையை வயதானவர்கள் மட்டும் தான் உட்கொள்வார்கள் என்று பலரும் நினைக்கின்றனர்.ஆனால் குழந்தைகள்,பெரியவர்கள் என்று யாராக இருந்தாலும் தினமும் ஒரு வெற்றிலை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.
வெற்றிலையில் மறைந்துள்ள மருத்துவ குணங்கள்:
1)இந்த இலையை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் செரிமானப் பிரச்சனை முழுமையாக சரியாகும்.
2)வெற்றிலையில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கிறது.இது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
3)உடலில் படியும் தேவையற்ற கழிவுகளை அகற்ற வெற்றிலையை அரைத்து சாறு எடுத்து பருகலாம்.சர்க்கரை நோயாளிகளுக்கு வெற்றிலை அருமருந்தாக திகழ்கிறது.வெற்றிலையை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் கீல்வாதம் குணமாகும்.
4)நெஞ்சில் படிந்துள்ள சளி கரைந்து வெளியேற வெற்றிலையை அரைத்து சாறு எடுத்து பருகலாம்.தொண்டை புண்களை ஆற்ற வெற்றிலை கஷாயம் செய்து பருகலாம்.
5)வெற்றிலை சாறு சிறந்த வலி நிவாரணியாக திகழ்கிறது.வெற்றிலையை காம்பு நீக்கிவிட்டு இலையை அரைத்து பருகினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
6)வயிறு உப்பசமாக இருந்தால் வெற்றிலையை அரைத்து சாறு எடுத்து வெந்நீரில் கலந்து பருகலாம்.கல்லீரலில் தேங்கி இருக்கும் கழிவுகள் அகல வெற்றிலையை உட்கொள்ளலாம்.
7)வெற்றிலையை அரைத்து சாறு எடுத்து பருகினால் ஆண்மை குறைபாடு சரியாகும்.வாய் துர்நாற்றம் நீங்க வெற்றிலை சாறு பருகலாம்.
8)உடலில் உள்ள சூடு தணிய வெற்றிலை சாறை பருகலாம்.சிறுநீரகம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாக வெற்றிலை சாறு செய்து பருக வேண்டும்.
9)உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய வெற்றிலை சாறு செய்து பருக வேண்டும்.தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க வெற்றிலை சாறு பருக வேண்டும்.
10)இருமல் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக வெற்றிலை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து பருக வேண்டும்.