இந்த கேக் செய்ய ஓவனோ முட்டையோ தேவைப்படாது!! வாங்க ட்ரை பண்ணலாம்!!

Photo of author

By Divya

இந்த கேக் செய்ய ஓவனோ முட்டையோ தேவைப்படாது!! வாங்க ட்ரை பண்ணலாம்!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பண்டம் கேக்.இதில் பல வகைகள் இருக்கிறது.இதன் வாசனை மற்றும் சுவையால் அனைவரும் கேக்கிற்கு அடிமையாகி விடுகிறோம்.ஓவன் உபயோகித்து செய்யப்படும் இந்த கேக்கை வீட்டு முறையில் குக்கரில் வைத்து முட்டை பயன்படுத்தாமல் செய்வது எவ்வாறு என்பது குறித்த தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*ரவை – 1 கப்

*பால் – 1/2 கப் (காய்ச்சி ஆறவைத்தது)

*சர்க்கரை – 1/2 கப்

*தயிர் – 1/4 கப்

*ரீபைண்ட் ஆயில் – 1/4 கப்

*ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி

*பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி

*பேக்கிங் சோடா – 1 தேக்கரண்டி

செய்முறை:-

1)கேக் செய்ய முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் 1 கப் ரவை,1/2 கப் சர்க்கரை,1/4 கப் தயிர்,1/2 கப் பால்,1/4 கப் ரீபைண்ட் ஆயில்,ஏலக்காய் தூள் 1/4 தேக்கரண்டி சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

2)இதை ஒரு பவுலுக்கு மாற்றி கொள்ளவும்.பின்னர் அதில் 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்,1 தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

3)பிறகு இதை 10 நிமிடத்திற்கு ஒரு தட்டு போட்டு மூடி ஊற விட வேண்டும்.

4)அடுத்து அடுப்பில் ஒரு அடிகனமான கடாய் அல்லது குக்கரை வைக்க வேண்டும்.அதனுள் ஒரு ஸ்டாண்டை வைக்கவும்.பின்னர் அந்த பாத்திரத்தின் மேல் தட்டு வைத்து 5 நிமிடத்திற்கு குறைந்த தீயில் அப்படியே விடவும்.

5)பின்னர் கேக் செய்ய கேக் பேன் எடுத்துக் கொள்ளவும்.அதில் நன்றாக எண்ணையை தடவ வேண்டும்.பிறகு மைதா மாவை அதில் தூவ வேண்டும்.

6)அடுத்து தயார் செய்து வைத்துள்ள ரவை கலவையை அதில் ஊற்றி சமப்படுத்தி கொள்ளவும்.

7)இதை மிதமான தீயில் சூடாகி கொண்டிருக்கும் கடாய் அல்லது குக்கரில் உள்ள ஸ்டாண்டு மேல் வைக்கவும்.பின்னர் அந்த குக்கர் அல்லது கடாயை ஒரு தட்டு கொண்டு மூடவும்.இதை 10 நிமிடம் வேக விடவும்.

8)பின்னர் தயாராகி வரும் கேக் மேல் அலங்காரத்திற்காக நட்ஸ் தூவி விடலாம்.பிறகு மீண்டும் அதை மூடிவிடவும்.இவ்வாறு 25 நிமிடம் கேக் குறைந்த தீயில் வேக வேண்டும். இருக்க வேண்டும்.

9)பின்னர் கேக் வெந்து விட்டதா என்று ஒரு குச்சியை எடுத்து குத்தி பார்க்கவும்.குச்சியில் மாவு ஒட்டாமல் இருந்தால் கேக் வெந்து விட்டது என்று அர்த்தம்.பிறகு அடுப்பை அணைக்கவும்.
பின்னர் இந்த கேக்கை ஆறவிட்டு ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.