மருத்துவ படிப்பில் இனி இந்த பாடத்தை வைக்க கூடாது! உச்சநீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!
பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு நடத்தப்படும் இருவிரல் சோதனை தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கு இன்று நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் ஹிமா கோலி முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாலியல் பாதிப்புக்கு உள்ளான நபருக்கு இருவிரல் பரிசோதனை நடத்த கூடாது.ஆனால் இந்த நடைமுறை இன்றும் நடைமுறையில் இருப்பது வருந்தத்தக்கதாகும்.மேலும் இந்த சோதனை ஆணாதிக்க மனோபாவம் கொண்டது.
இதில் எந்த வித அறிவியல் தன்மையும் இல்லை.அதனை தொடர்ந்து இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்பதை மாநில போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் உறுதி செய்து கொள்ள வேண்டும்.அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் இருந்து இருவிரல் பரிசோதனை தொடர்பான பாடங்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறை செயலர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.