இந்த காலம் பனிக்காலம். காலையில் பயங்கரமாக பனி பொழிவு நடந்து வருகிறது. இந்த சமயம் சிறு குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சொல்லி இருமல் சளி தொந்தரவு அதிகமாக இருக்கும். பொதுவாக சளி என்றால் மூக்கில் நீர் வடிதலும் இருக்கும், அதே போல் நுரையீரலிலும் சளி தேங்கி கிடக்கும்.
வறட்டு இருமலுக்கு நல்ல தீர்வை காண்போம்.
அதனால் நுரையீரலில் தங்கி கிடக்கும் சளியை இந்த பானத்தின் மூலம் சரி செய்து விடலாம். அதை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை குடித்தால் நாள் பட்ட வறட்டு இருமல் குணமாகும்.
சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிப்பதால் நீண்ட நேரம் நல்ல எனர்ஜியுடன் வேலை பார்க்க முடியும்.
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் ஒரு டம்ளர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை தினமும் குடித்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
இதில் நிரம்பியுள்ள மாவுச்சத்து, உணவு செரிமானத்தை சீராக்கும்… இரைப்பைக் குடல் அழற்சியை தடுக்கும்.