இந்த பூவின் மொட்டு தைராய்டு பிரச்சனையை சரி செய்யும்!! நம்புங்க இது 100% அனுபவ உண்மை!!

Photo of author

By Divya

இந்த பூவின் மொட்டு தைராய்டு பிரச்சனையை சரி செய்யும்!! நம்புங்க இது 100% அனுபவ உண்மை!!

Divya

இன்றைய காலகட்டத்தில் ஆண்களைவிட பெண்கள் தான் பல்வேறு உடல் நலக் கோளாறுகளை சந்தித்து வருகின்றனர்.இதில் தைராய்டு பாதிப்பு என்பது பெண்களிடையே அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது.

கழுத்தின் முன் பக்கத்தில் சுரக்கும் தைராய்டு சுரப்பியின் அளவு அதிகரித்தல் அல்லது குறைதல் போன்ற காரணங்களால் தைராய்டு பாதிப்பு ஏற்படுகிறது.இந்த தைராய்டு சுரப்பி பட்டாம்பூச்சி வடிவில் இருக்கும்.இந்த தைராய்டு பாதிப்பு உள்ள பெண்களால் எளிதில் கருவுற முடியாது.மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரை தொடர்ந்து உட்கொண்டு தைராய்டை கட்டுக்குள் வைத்தால் மட்டுமே கருத்தரிக்க முடியும்.தைராய்டில் ஹைப்போ தைராய்டிசம்,ஹைப்பர் தைராய்டிசம் என இருவகை இருக்கிறது.

தைராய்டு அறிகுறிகள்:-

1)முறையற்ற மாதவிடாய்
2)எளிதில் சோர்வடைதல்
3)மலச்சிக்கல்
4)எடை கூடுதல்
5)மனச்சோர்வு
6)மறதி

தைராய்டு காரணங்கள்:-

1)மோசமான உணவுப்பழக்கம்
2)அயோடின் குறைபாடு
3)ஹார்மோன் ஏற்றத்தாழ்வு

தைராய்டு பாதிப்பை சரி செய்யும் வீட்டு வைத்தியம்:

மந்தாரை பூவின் மொட்டை வைத்து தைராய்டு பாதிப்பை சரி செய்து கொள்ளலாம்.இந்த மந்தாரை பூவில் அஸ்ட்ரா காஸின்,அமினோ அமிலங்கள்,குவார் செட்டின் என்று பல வேதிப்பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த மந்தாரை செடியின் இலை,பூ,வேர்,பட்டை என்று அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.மந்தாரை பூவின் மொட்டுகளை தைராய்டு பாதிப்பிற்கான மருந்தாக பயன்படுத்தலாம்.

தேவைப்படும் பொருட்கள்:-

**மந்தாரை பூ மொட்டு – 10
**தண்ணீர் – ஒரு டம்ளர்

செய்முறை விளக்கம்:-

1)முதலில் மந்தாரை மொட்டை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

2)பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து மந்தாரை மொட்டுகளை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

3)இந்த மந்தாரை பூ பானத்தை ஒரு கிளாஸிற்கு வடித்து பருகி வந்தால் தைராய்டு பாதிப்பு முற்றிலும் குணமாகிவிடும்.