வில்வ மரத்தின் இலை,வேர்,பழம்,காய் என்று அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.வில்வம் என்பதற்கு உயிர் என்று பொருள்.நமது உடல் ஆரோக்கியத்தை காக்கும் மருந்தாக வில்வம் திகழ்கிறது.
வில்வம் பழத்தை ஜூஸாகவோ அல்லது சர்ப்த் செய்தோ சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.வில்வ இலையை உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து பருகி வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.
வில்வ இலையில் டீ போட்டு குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் வில்வ இலையை பொடித்து தண்ணீரில் கலந்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.வில்வ இலையை நசுக்கி நெற்றி மீது தேய்த்தால் தலைவலி குணமாகும்.
அதேபோல் வில்வம் பழத்தை அரைத்து சாறாக பருகி வந்தால் இதயத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.சருமம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக வில்வம் பழத்தை அரைத்து பருகலாம்.அலர்ஜி இருப்பவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் தீர்வு கிடைக்கும்.
வில்வம் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
*கால்சியம்
*இரும்புச்சத்து
*பாஸ்பரஸ்
*புரோட்டின்
*வைட்டமின்
வில்வம் பழ ஜூஸ் பருகி வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வது கட்டுப்படும்.வில்வம் பழத்தை பேஸ்ட் பதத்திற்கு அரைத்து நாட்டு சர்க்கரை மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.நன்றாக கெட்டியாக வரும் வரை கொதிக்க வைத்து ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் இருமல் பாதிப்பு குணமாகும்.
வில்வம் பழத்தை அரைத்து பருகினால் வயிற்றுப்போக்கு குணமாகும்.வயிற்று வலி பிரச்சனையால் அவதியடைந்து வருபவர்கள் வில்வம் பழத்தை அரைத்து பருகலாம்.வில்வம் பழ சாறு பருகி வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள் மலம் வழியாக வெளியேறிவிடும்.வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகள் அனைத்தும் குணமாக வில்வம் பழத்தை உட்கொள்ளலாம்.
உடல் நரம்புகள் வலிமையாக இருக்க வில்வம் பழத்தை அரைத்து நாட்டு சர்க்கரை கலந்து குடிக்கலாம்.உடல் சூடு தணிந்து குளிர்ச்சியாக இருக்க வில்வம் பழத்தை ஜூஸாக பருகலாம்.