பாஜகவுடன் திமுக மறைமுக கை கோர்ப்பு!! ஹிந்தி தெரிந்தால் தான் பெண்களுக்கு இந்த அரசு வேலை!!

Photo of author

By Rupa

NTK DMK: திமுக மும்மொழி கொள்கையை முற்றிலும் எதிர்த்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பெண்களுக்காக உதவும் வகையில் ஓர் மையம் ஒன்றை அமைக்க உள்ளது. இதில் வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றால் கட்டாயம் தமிழ் ஆங்கிலம் இந்தி என மூன்று மொழிகளும் தெரிந்திருக்க வேண்டுமென கூறியுள்ளனர். இதன் அறிவிப்பு குறித்து நாம் தமிழர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அதில் அவர் கூறியதாவது, அண்ணாவின் இரு மொழி கொள்கைகளை கடை பிடிப்பதை தவிர்த்து மும்மொழி கொள்கையை கடைபிடிப்பதா இது தான் திராவிட மாடலா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இதற்கு முன் தலைமையில் காங்கிரஸ் இருந்த போதிலும் தமிழ்நாட்டில் பாடங்கலெங்கும் கட்டாயம் ஹிந்தி இருக்க வேண்டுமென நினைத்தனர்.

ஆனால் இதனை எதிர்த்து போரிட்டு இரு மொழி கொள்கையை கொண்டு வந்தனர். இதில் உயிரை இழந்தவர்கள் பலர். இவ்வாறு இருக்கையில் தான் அண்ணா முன்னிலையில் திமுக ஆட்சியை கைப்பற்றியது. இப்படி இன்னுயிரை இழந்தவர்கள் தியாகம் கூட அறியாமல் தற்பொழுது மும்மொழி கொள்கைகளை கடைபிடிப்பது மிகவும் தவறானது. குறிப்பாக வேலைவாய்ப்பில் இந்த நடைமுறை கொண்டுவருவது மத்தியின் மறைமுக ஆதிக்கம் மற்றும் திணிப்பை காட்டுவது போல உள்ளது.

அண்ணா கொண்டு வந்த இரு மொழி கொள்கைகளை முற்றிலும் பறிக்கும் செயலில் தான் தற்பொழுது திமுக செயல்பட்டு வருகிறது. காலப்போக்கில் மும்மொழி கொள்கையை திமுக கொண்டு வரும் பட்சத்தில் மீண்டும் தமிழகத்தில் மொழி போர் நடைபெறும். அச்சமயத்தில் திமுக மாண்டு போய்விடும் என கூறியுள்ளார்.