இனிப்பு பானமான பாயாசத்தில் சேர்க்கப்படும் பொருளான ஜவ்வரிசி சாகோ,சௌவாரி,சபுதானா என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.இந்த ஜவ்வரிசி மரவள்ளிக்கிழங்கு மாவில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பொருளாகும்.ஜவ்வரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
ஜவ்வரிசியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:-
*புரதம்
*கால்சியம்
*மெக்னீசியம்
*இரும்பு
*பொட்டாசியம்
*வைட்டமின் ஈ மற்றும் கே
*போலிக் அமிலம்
ஜவ்வரிசி மருத்துவ பயன்கள்:-
1)ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஜவ்வரிசி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.அடிக்கடி ஜவ்வரிசி சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் அதிகரிக்கும்.
2)ஜவ்வரிசியை வேகவைத்து சாப்பிட்டால் கஞ்சி போல் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு பிரச்சனை சரியாகும்.
3)உடல் எடை குறைவாக இருப்பவர்கள் ஜவ்வரிசியை உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் எடையை அதிகரிக்கலாம்.
4)ஜவ்வரிசியில் உள்ள கால்சியம் சத்து உடல் எலும்புகளை வலிமையாக்க உதவுகிறது.ஜவ்வரிசியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
5)ஜவ்வரிசியில் உள்ள போலேட் மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.ஜவ்வரிசியில் உள்ள புரதம் தசைகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
6)அல்சர் புண் இருப்பவர்கள் ஜவ்வரிசியை வேகவைத்து தேங்காய் பாலில் கலந்து சாப்பிட்டால் சீக்கிரம் குணமாகும்.
7)உடலில் பித்தம் அதிகமாக இருபவர்கள் ஜவ்வரிசியில் கஞ்சி செய்து பருகலாம்.இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க ஜவ்வரிசி உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்கள்.
8)இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்களுக்கு ஜவ்வரிசி உணவு தீர்வாக திகழ்கிறது.ஜவ்வரிசி உணவுகள் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.
9)காய்ச்சல் வந்தவர்கள் ஜவ்வரிசியில் கஞ்சி செய்து குடித்தால் சீக்கிரம் அவை குணமாகிவிடும்.
10)ஜவ்வரிசியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் செரிமான ஆரோக்கியம் அதிகரிக்கும்.