மனிதர்களை சைலண்ட்டாக கொல்லும் நோய்களில் ஒன்று தான் மஞ்சள் காமாலை.இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சையை பெற்றுக் கொண்டால் உயிர் சேதம் உண்டாவது தடுக்கப்படும்.
கல்லீரல் பாதிப்பு அல்லது பித்தப்பை குழாயில் அடைப்பு ஏற்பட்டால் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படுகிறது.
மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
உப்பு மற்றும் புளிப்பை குறைத்துக் கொள்ள வேண்டும்.தண்ணீரை கொதிக்க வைக்காமல் பருகுவதை தவிர்க்க வேண்டும்.எண்ணெய் பலகாரங்களை தவிர்க்க வேண்டும்.
பித்தம் தணிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் போட வேண்டும்.
மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் வீட்டு வைத்தியம்
தேவைப்படும் பொருட்கள்:
1)கீழாநெல்லி ஒரு கைப்பிடி அளவு
2)சீரகம் ஒரு தேக்கரண்டி
செய்முறை:
ஒரு கைப்பிடி அளவிற்கு கீழாநெல்லியை பறித்து தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.பிறகு இதை உரலில் போட்டு அரைக்கவும்.
இத்துடன் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி காலை,மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை மூன்று தினங்களில் குணமாகிவிடும்.
தேவைப்படும் பொருட்கள்:
1)கீழாநெல்லி – ஒரு கைப்பிடி அளவு
2)மிளகு – அரை தேக்கரண்டி
3)சுக்கு – ஒரு பின்ச்
4)சீரகம் – ஒரு தேக்கரண்டி
செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவு எடுத்துக் கொள்ளவும்.பிறகு அவற்றை உரல் அல்லது மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு இதை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் போட்டு பருகி வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
தேவைப்படும் பொருட்கள்:
1)கீழாநெல்லி – கால் கைப்பிடி அளவு
2)பூவரசு இலை – ஒன்று
3)சீரகம் – ஒரு தேக்கரண்டி
4)தண்ணீர் – ஒரு கப்
செய்முறை:
அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ளவும்.பிறகு அதில் கால் கைப்பிடி கீழாநெல்லி இலை,ஒரு தேக்கரண்டி சீரகம்.ஒரு பூவரசு இலை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
பாதியாக சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.பிறகு இந்த பானத்தை வடிகட்டி பருகினால் மஞ்சள் காமாலைக்கு உரிய தீர்வு கிடைக்கும்.