ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மருந்து இந்த ஒரு காய்!! இப்படி செய்தால் குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்!!

Photo of author

By Rupa

 

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் கனியான நெல்லிக்காயில் வைட்டமின் ஏ,வைட்டமின் சி,ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்,நார்ச்சத்து மற்றும் மினரல்கள் நிறைந்திருக்கிறது.தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.கண் தொடர்பான பாதிப்பு இருப்பவர்கள் நெல்லிக்காயை அரைத்து சாறாக அருந்தலாம்.

முடி உதிர்வு பாதிப்பு இருப்பவர்கள் நெல்லிக்காய் ஜூஸ் அருந்தினால் பலன் கிடைக்கும்.மலச்சிக்கலை நீங்க உடலில் காணப்படும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைய நெல்லிக்காயை அடிக்கடி சாப்பிடலாம்.

வாயுத் தொல்லையால் அவஸ்தைபடுபவர்களுக்கு நெல்லிக்காய் சாறு சிறந்த தீர்வாக இருக்கும்.செரிமானப் பிரச்சனை,இரும்புச்சத்து குறைபாடு,இரத்த சோகை உள்ளிட்ட நோய் பாதிப்புகளுக்கு நெல்லிக்காய் அருமருந்தாக செயல்படுகிறது.இவ்வளவு மருத்துவ குணம் நிறைந்த நெல்லிக்காயின் துவர்ப்பு சுவையை குழந்தைகள் சிலர் விரும்ப மாட்டார்கள்.எனவே அதை மிட்டாய் வடிவில் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பர்கள்.

தேவையான பொருட்கள்:

1)மலை நெல்லிக்காய் – 30

2)வெல்லம் – 250 கிராம்

3)தூள் உப்பு – சிறிதளவு

4)நெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் மலை நெல்லிகாயை நீரில் போட்டு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு அதை இட்லி பாத்திரத்தில் போட்டு வேக விடவும்.10 முதல் 15 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை ஆறவிட்டு அதன் விதையை நீக்கிவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அரை கப் தண்ணீர் ஊற்றவும்.பின்னர் 250 கிராம் பொடித்த வெல்லத்தை சேர்த்து கரையும் வரை கொதிக்க விடவும்.அதன் பின்னர் அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அரைத்த மலை நெல்லிக்காய் விழுது மற்றும் கரைத்த வெல்லப் பாகை ஊற்றி கிளறி விடவும்.பிறகு இதை ஒரு தட்டு போட்டு சிறிது நேரம் மூடி வைக்கவும்.

நெல்லிக்காய் விழுது கெட்டியானதும் சிறிதளவு உப்பு மற்றும் நெய் சில நிமிடங்கள் சேர்த்து கிளறவும்.பிறகு ஒரு அகலமான தட்டில் நெய் தடவி தயார் செய்து வைத்துள்ள நெல்லிக்காய் கலவையை கொட்டி பரப்பி விடவும்.இதை சிறிது நிமிடம் உலர விட்டு பிறகு தங்களுக்கு பிடித்த வடிவத்தில் கட் செய்து ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.இப்படி நெல்லிக்காய் கேண்டியை செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.