ஏடிஎம் யில் பணம் எடுக்க இது கட்டாயம் வேண்டும்!! அமைச்சர் தங்கம் தென்னரசின் திடீர் நடவடிக்கை!!

Photo of author

By Rupa

ஏடிஎம் யில் பணம் எடுக்க இது கட்டாயம் வேண்டும்!! அமைச்சர் தங்கம் தென்னரசின் திடீர் நடவடிக்கை!!

Rupa

This is a must for ATM withdrawal!! Sudden action of Minister Thangam Southern Government!!

ஏடிஎம் யில் பணம் எடுக்க இது கட்டாயம் வேண்டும்!! அமைச்சர் தங்கம் தென்னரசின் திடீர் நடவடிக்கை!!

மத்திய அரசு ஹிந்தி மொழியை நிலைநாட்ட வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டில் மட்டும் அதனின் ஆதிக்கத்தை அதிகமாக செலுத்த முயற்சிக்கிறது. இது குறித்து நாடாளுமன்றத்தில் பலமுறை மாநில அரசானது  கேள்விகள் எழுப்பியும் தக்க பதில் அளிக்கவில்லை. எனவே தற்பொழுது பதவி மாற்றம் செய்யப்பட்டு நிதி அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசு ஓர் புதிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

திமுக ஆட்சி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் அமைச்சரவையில் பல்வேறு மாற்றத்தை கொண்டு வந்து விட்டது. அந்த வகையில் தற்பொழுது நிதி அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு மாநில வங்கிகளுக்கு ஒரு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், தங்களது மக்கள் எளிய முறையில் ஏடிஎம் முதலியவற்றை  உபயோகிக்க தமிழ் மொழியை அதில் கொண்டு வர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அவ்வாறு கொண்டு வருவது மூலம் எளிய மக்களுக்கும் புரியும்படி இருக்கும். எனவே மக்கள் சிரமப்பட தேவையில்லை என தெரிவித்தார். அதுமட்டுமின்றி வங்கி கிளைகளின் பலகைகளிலும் தமிழ் மொழி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

பல்வேறு கலாச்சாரங்கள் மொழிகள் சூழ்ந்த நமது இந்திய நாட்டில் ஹிந்தி மொழியை மட்டும் ஒரு பொது மொழியாக கொண்டு வர வேண்டும் என்பதில் பாஜக தீவிரம் காட்டி வந்தாலும் அதனை பெரும்பாலான மாநிலங்கள் எதிர்க்க தான் செய்கின்றனர். அந்த வகையில் தமிழக அரசும் அதனை எதிர்த்து தமிழை நிலைநாட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.