திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்!! சாதிய கலவரத்தை தூண்டி அரசியல் செய்யும் ஆளும் கட்சி!! 

Date:

Share post:

திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்!! சாதிய கலவரத்தை தூண்டி அரசியல் செய்யும் ஆளும் கட்சி!!

விழுப்புரம் மாவட்டத்தில் மேல்பாதி என்ற கிராமத்தில் வன்னியர்களுக்கு உரித்தான திரௌபதி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. அதுமட்டுமின்றி அந்த சாதியினரின் குலதெய்வம் ஆகவும் அது பார்க்கப்படுகிறது.குறிப்பிட்ட அந்த சாதியினர் மட்டும் காலகாலமாக அந்த தெய்வத்தை வழிபட்டு வந்த நிலையில் தற்பொழுது நடைபெற்ற திருவிழாவின்பொழுது பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் சிலர் கோவிலுக்குள் சென்று வழிபட்டுள்ளனர்.

இதற்கு கோவில் நிர்வாகிகள் உட்பட அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். காலம் காலமாக ஒரு ஊரில் பின்பற்றி வந்த விதிமுறைகளை ஏன் தற்பொழுது மீற வேண்டும் என்று கேள்வி எழுந்ததுள்ளது. உடனடியாக அந்தப் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களை தாக்கியதாக கூறி போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட பொழுது வேறொரு வேலையாக வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், பட்டியலின மக்களுக்கு ஆதரவு அளித்து,மற்றொரு சாதி வகுப்பினரை ஒருமையில் அவதூறாக பேசியுள்ளார்.

இவ்வாறு இவர் பேசியது இரு சாதியினருக்கு இடையே மேற்கொண்டு கலவரத்தை உண்டாக்கியது. இத்தனை நாட்கள் ஊர் ஒன்றுபட்ட அமைதியாக போன நிலையில் தற்போது இவரின் இந்த தூண்டுதலால் பெருமளவில் சர்ச்சை வெடிக்கும் நிலை உண்டாகிவிட்டது.

சாதி கலவரத்தை தூண்டி விட்டு ஆளும் கட்சி இப்படி வேடிக்கை பார்ப்பதா? என அவ்வூரை சேர்ந்தவர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல உயர் சாதியினர் கீழ் சாதியினர் என பாகுபாடு இருப்பதினால் தான் இவர்கள் இங்கு வரக்கூடாது என்ற நிபந்தனைகள் இருக்கிறது. சாதியே இல்லை என்று கூறுங்கள் அனைவருக்கும் சமநிலையை ஏற்படுத்தி கொடுங்கள் என அந்த திரௌபதி கோவில் முன் ஒரு சாதி வகுப்பினர் போராட்டம் செய்தனர்.

மேற்கொண்டு ஆளும் கட்சி அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக மக்களுடன் விளையாடுவது சரிதானா என்ற கேள்வியும் அனைவரும் மத்தியில் எழுகிறது. ஏனென்றால் ஒவ்வொரு வகுப்பை சேர்ந்த சாதியினருக்கும் அவர்களுக்கென்று விதிமுறைகள் குலதெய்வம் என்பது இருக்கும்.

அப்படி இருக்கும் பட்சத்தில் அந்தந்த சாதியினர் அந்தந்த குலதெய்வ வழிபாட்டை தான் மேற்கொண்டு வருகின்றனர்.இதை தவிர்த்து  ஒரு சாதியை விட்டு மற்றொரு சாதி குலதெய்வத்தை வழிபடுவதில்லை. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் திமுக இதில் மட்டும் ஏன் தலையிட வேண்டும். அவர் அவர்களுக்கு உரித்தான தெய்வத்தை வழிபட வேண்டியதுதானே என அடுத்தடுத்து கேள்விகளை ஆளும் கட்சியை நோக்கி வைக்கின்றனர்.

மேல்பாதி கிராமத்தில் இரண்டு வகுப்பை சேர்ந்த சாதியினர் இடையே ஒற்றுமை நிலவி வந்த நிலையில் திமுகவின் இந்த சாதி கலவர தூண்டுதலால் சமரசம் பேசக்கூட தற்பொழுது வாய்ப்பில்லாமல் போய்விட்டது.காலம் காலமாக பின்பற்றி வந்த விதிமுறைகளை மீற முடியாது என ஓர் சாதியை சேர்ந்தவர்கள் திட்டவட்டமாக உள்ள நிலையில் கோட்ட வட்டாச்சியர் அந்த கோவிலுக்கு சீல் வைத்துள்ளார்.மேற்கொண்டு பிரச்சனைகள் ஏதும் நடக்காமல் இருக்க கிராமத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

spot_img

Related articles

நயன்தாராவின் பணத்தை சுருட்டிய பிரபுதேவா…? – வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!!

நயன்தாராவின் பணத்தை சுருட்டிய பிரபுதேவா...? - வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருவர் நடிகை நயன்தாரா. இவருக்கென்று...

சிம்ரனை காதலித்து கழிட்டி விட்ட நடிகர்கள் – கல்யாணம் வரை சென்று பிரிந்து போன காதல் கதை!!

சிம்ரனை காதலித்து கழிட்டி விட்ட நடிகர்கள் - கல்யாணம் வரை சென்று பிரிந்து போன காதல் கதை!! 90ஸ் கால கட்டத்தில் தன் இடுப்பு அழகால்...

பிரசாந்த் பட விழாவில் அவமானப்பட்ட நடிகர் விஜய் – வெளியான தகவல் – ஷாக்கான ரசிகர்கள்!!

பிரசாந்த் பட விழாவில் அவமானப்பட்ட நடிகர் விஜய் - வெளியான தகவல் - ஷாக்கான ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர்...

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா!!

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் 5 முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். தனது தனித்துவமான...