என்னடா இது சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை! அமரன்?
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அமரன். அண்மையில் இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
அந்த டீசரில் காஷ்மீர் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளது எனக் கூறி எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இதனைக் கண்டித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளர் கமல்ஹாசனின் உருவப் படங்களை எரித்தும், முற்றுகையிடும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
“சிறுபான்மை மக்களுக்கு எதிரான சினிமாவை தடுத்து நிறுத்து”, என கோஷமிட்டு சிவகார்த்திகேயனையும் கமல்ஹாசனையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என முழக்கமிட்டனார்.
இதனையடுத்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் செய்தியாளர்களிடம் பேசும்போது, “சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் படத்தில் இஸ்லாமியர்களையும் காஷ்மீர் மக்களையும் தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக காட்சிகள் அமைந்துள்ளது. தொடர்ந்து அண்ணன், தம்பி, மாமன் மச்சான்களாக பழகி வரும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களிடையே குரோதத்தை விதைக்கும் விதமாக தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இதனை கண்டித்து தமிழக ஜனநாயக கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அந்த வகையிலே இது போன்ற படங்கள் வெளிவருவதை கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் தமிழக அரசு இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.” எனக் கூறினார்.