வீட்டில் லட்சுமி கடாக்சம் தங்கி செல்வம் பெருக இதை இந்த நாளில் போதும்!!

Photo of author

By Divya

வீட்டில் லட்சுமி கடாக்சம் தங்கி செல்வம் பெருக இதை இந்த நாளில் போதும்!!

ஒருவர் வீட்டில் லட்சுமி தாயார் குடி அமர்ந்து விட்டார் என்றால் அந்த வீடு செல்வ செழிப்புடன் நிறைந்து இருக்கும் என்பது ஐதீகம். இதை தான் லட்சுமி கடாச்சம் என்று சொல்வார்கள். நம்மில் பலரும் இதற்காக தான் பல்வேறு பரிகாரங்கள், பூஜைகள் செய்து வருகிறோம். அந்த வகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை பௌர்ணமி நாளன்று செய்தோம் என்றால் வீட்டில் ட்சுமி கடாக்சம் தங்கி செல்வம் பெருகும்.

வீட்டில் லட்சுமி கடாக்சம் தங்க எளிய பரிகாரம்:-

தேவையான பொருட்கள்:-

*பச்சை துணி

*ஜாதிக்காய்

*ஏலக்காய்

*வசம்பு

*பச்சைக் கற்பூரம்

*வெட்டி வேர்

பரிகாரம் செய்யும் முறை…

ஒரு சிறிய பச்சைத் துணியில் ஒரு கைப்பிடி அளவு வெட்டி வேர் போட்டு, 3 ஜாதிக்காய், 6 வசம்பு, 11 ஏலக்காய், 2 தேக்கரண்டி பச்சைக் கற்பூரம் சேர்த்து மூட்டையாக கட்டி பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடவும்.

பணப் பெட்டியில் குறைந்தது 10 ரூபாய் நோட்டாவது கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த பொருட்களை எதன் மீது வைக்கின்றோமோ அதைத் தான் அது ஈர்த்துக் கொடுக்கும். பணத்தின் மீது வைத்தால் மட்டும் தான் பணத்தை ஈர்த்துக் கொடுக்கும்.

இதேபோல் பௌர்ணமி திதி முடிவதற்குள் ஒரு பச்சை துணியில் சிறிது வெட்டிவேர், மூன்று வசம்பு, சிறிது பச்சைக் கற்பூரம் சேர்த்து மூட்டை கட்டி நிலைவாசலில் கட்டி விடவும்.

இந்த இரண்டு முடிச்சிகளையும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றினால் போதுமானது. பழையதைக் கால் படாத இடத்தில் போட்டு விடவும்.

இதை இரண்டு முறை மாற்றுவதற்குள் வீட்டில் நிச்சயம் லட்சுமி கடாக்சம் தங்கி செல்வம் பெருக ஆரம்பிக்கும்.