இது 100 வயாகரா மாத்திரைக்கு சமம்!! அந்த விஷயத்திற்காக தான் ஆண்களை பூண்டு சாப்பிட சொல்றாங்க!

Photo of author

By Divya

பல ஆண்டுகளாக நமது உணவில் பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.பூண்டு ஓர் உணவுப் பொருள் மட்டுமல்ல.மருத்துவ குணம் நிறைந்த ஓர் மூலிகையாகும்.செரிமானக் கோளாறு,வாயுத் தொல்லை இருப்பவர்களுக்கு பூண்டு அருமருந்தாகும்.

உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்ற பூண்டு உதவுகிறது.பூண்டில் வைட்டமின் சி,பி6,மாங்கனீசு,செலீனியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.தினந்தோறும் பூண்டு சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

அது மட்டுமின்றி உடலில் புற்றுநோய் செல்கள் உருவாதை தடுக்கிறது.குடல் சார்ந்த பிரச்சனைகளை போக்குவதில் பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது.இப்படி பல நன்மைகள் கொண்டிருக்கும் பூண்டு ஆண்களுக்கு கிடைத்த ஒரு வரப் பிரசாதமாகும்.

பூண்டில் இருக்கின்ற அல்லிசின் மற்றும் செலினியம் ஆண்களின் பாலுணர்வை தூண்டக் கூடியவை.இது விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு விந்தணு சேதத்தை தடுக்க உதவுகிறது.தினமும் 2 பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.விந்து முந்துதல்,விதைப்பை வீக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க பூண்டு பற்களை சாப்பிட வேண்டும்.

தினமும் இரவு காய்ச்சிய பாலில் பூண்டு பற்கள் சேர்த்து குடித்து வந்தால் ஆண்மை குறைபாடு ஏற்படாமல் இருக்கும்.பூண்டு பற்களை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.இருமல்,காய்ச்சல்,தலைவலி இருப்பவர்கள் பூண்டு கஷாயம்,பூண்டு தேநீர் செய்து அருந்தினால் உரிய பலன் கிடைக்கும்.