சிகிச்சைக்கு பிறகு அவருடைய நிலைமை இதுதான்! மருத்துவமையில் இருந்து புகைப்படத்தை வெளியிட்ட விஜய் ஆண்டனி! 

Photo of author

By Parthipan K

சிகிச்சைக்கு பிறகு அவருடைய நிலைமை இதுதான்! மருத்துவமையில் இருந்து புகைப்படத்தை வெளியிட்ட விஜய் ஆண்டனி! 

Parthipan K

This is his condition after treatment! Vijay Antony published a photo from the hospital!

சிகிச்சைக்கு பிறகு அவருடைய நிலைமை இதுதான்! மருத்துவமையில் இருந்து புகைப்படத்தை வெளியிட்ட விஜய் ஆண்டனி!

சில வருடங்களுக்கு முன்பு  தமிழ்,தெலுங்கு என பல மொழிகளில் வெளியான திரைப்படம்  பிச்சைக்காரன்.இந்த படத்தை இயக்குனர் சசி இயக்கினார்.அந்த படம்  ஹிட் ஆனது.அதனை தொடர்ந்து தற்போது  பிச்சைக்காரன் 2 படம் வெளியாகவுள்ளது.அதற்கான படபிடிப்பு தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகின்றது.லங்காவி தீவில் நடைபெற்ற படபிடிப்பின்போது விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கினார்.அந்த விபத்தில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

அதனை தொடர்ந்து அவருக்கு படபிடிப்பு தளத்தில் முதலுதவி வழங்கப்பட்டது.அதன் பிறகு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மேலும் குறிப்பாக பிச்சைக்காரன் 2 படத்தை தனது விஜய் ஆண்டன் புரொடக்ஷன் மூலம் தயாரிப்பதோடு இசையமைப்பாளராகவும்,இயக்குநராகவும் பணியாற்றி வருகின்றார்.

இந்த படத்தின் மூலம் தான் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.மேலும் இந்த படத்தில் ஜான் விஜய்,ஹரீஷ் பேராடி,ஒய்ஜி மகேந்திரன்,அஜய் கோஷ்,யோகி பாபு உள்பட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.மேலும் இந்த படம் மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் மலேசியாவில் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டார்.அவருக்கு தாடை மற்றும் மூக்கு பகுதியில் காயம் ஏற்பட்டது.அதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.சிகிச்சைக்கு பிறகு நான் நலமுடன் உள்ளேன்.விரைவில் உங்களை சந்திக்கிறேன் என விஜய் ஆண்டனி மருத்துவமனையில் இருக்கும் புகைபடம் ஒன்றை டுவிட் செய்துள்ளார்.