ரூபாய் நோட்டுகளை எங்களால் கணக்கிட முடியவில்லை! தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்!

0
75
We can't count the banknotes! Information released by Devasam Board!
We can't count the banknotes! Information released by Devasam Board!

ரூபாய் நோட்டுகளை எங்களால் கணக்கிட முடியவில்லை! தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்!

பக்தர்கள் அதிகளவில் மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருபது கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில்தான்.இங்கு ஆண்டு தோறும் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கபடுவது வழக்கம் தான்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.கடந்த ஆண்டு  நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது.

நடை திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே அதிகளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.அதனை தொடர்ந்து 17 ஆம் தேதி மண்டல பூஜை தொடங்கப்பட்டது.அதனை தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தார்கள் அதனால் சிறப்பு ரயில்கள் இயக்கபட்டது.பகதர்கள் கூட்டம் அலைமோதியது அதன் காரணமாக பெரியவர்கள் ,சிறியவர்கள், பெண்கள் என அனைவருக்கும் தனிதனி வரிசைகள் அமைக்கப்பட்டது.

மேலும் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி மகரஜோதி பூஜை நடைபெற்றது.அதிகாலை மூன்று மணிக்கு நடை திறக்கப்பட்டது.அந்நேரத்தில் இருந்தே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.மேலும் ஜனவரி 12 ஆம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய உண்டியல்  காணிக்கை மட்டும் ரூ 3.10.4 கோடியாகும்,அதனையடுத்து ஜனவரி 17 ஆம் தேதி நிலவரப்படி ஐயப்பன் கோவிலின் உண்டியல் வருமானம் ரூ 31546 கோடி என தேவசம் போர்டு அறிவித்து.இந்நிலையில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை மனிதர்களால் கணக்கிட முடியவில்லை. அதனால் பணம் கணக்கிடும் இயந்திரம் வேண்டுமென தேவசம் போர்டு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K