தன் மரணம் இப்படி தான் இருக்கும்.. முன்னரே நமக்கு உணர்த்திய எதிர்நீச்சல் மாரிமுத்து!!

Photo of author

By Divya

தன் மரணம் இப்படி தான் இருக்கும்.. முன்னரே நமக்கு உணர்த்திய எதிர்நீச்சல் மாரிமுத்து!!

Divya

தன் மரணம் இப்படி தான் இருக்கும்.. முன்னரே நமக்கு உணர்த்திய எதிர்நீச்சல் மாரிமுத்து!!

வெள்ளித்திரை,சின்னத்திரை என இரண்டிலும் தன் நடிப்பினால் ரசிகர்களை ஈர்த்தவர் மாரிமுத்து.உதவி இயக்குநர்,இயக்குநர்,நடிகர் என்று தன் கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியால் உயர்ந்த இவர் தமிழில் ‘கண்ணும் கண்ணும்’,’புலிவால்’ உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கிறார்.இதுவரை தமிழில் 50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகராகவும்,வில்லனாகவும் தனது நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.பரியேறும் பெருமாள்,ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் இவரின் எதார்த்த நடிப்பை பார்த்து பலர் பாராட்டினர்.

இவர் வெள்ளித்திரையை விட சின்னத்திரைக்கு வந்த பிறகு தான் மிகவும் பேமஸ் ஆனார்.பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.சொல்லப்போனால் இந்த எதிர்நீச்சல் சீரியல் இவரால் தான் ஓடிக்கொண்டிருக்கிறது.இந்த சீரியலில் இவரின் ‘ஏய் இந்தம்மா’ வசனம் சமூக வலைத்தளத்தில் பேமஸ் ஆன வசமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் யாரும் எதிர்பார்த்திடாத ஒரு சோக நிகழ்வு இன்று காலையில் நடந்துள்ளது.நாம் அனைவரும் பார்த்து ரசித்த நடிகர் மாரிமுத்து திடீர் நெஞ்சு வலி காரணமாக மரணமடைந்தார்.
இன்று காலையில் ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்கு டப்பிங் பேசுவதற்காக டப்பிங் தியேட்டருக்கு மாரிமுத்து சென்றிருக்கிறார்.அங்கு டப்பிங் பணியை மேற்கொண்டிருந்த போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.உடன் இருந்தவர்கள் அவரை வடபழனியில் இருக்கின்ற தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று மருத்துவர்கள் கூறினார்.இதனால் மாரிமுத்துவின் இறப்பு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது.

இந்நிலையில் தற்பொழுது இவரின் வீடியோ ஒன்று இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.எதிர்நீச்சல் தொடரில் அவர் நடித்த ஒரு காட்சி தான் அந்த வீடியோ பதிவு.அதில்
அவர் காருக்கள் உட்கார்ந்த படி பயணம் செய்கிறார்.அப்பொழுது “அடிக்கடி நெஞ்சு வலி அழுத்துது.அப்போ அப்போ வலி வருது.இது உடம்பில் வரும் வலியா,மனசில் வரும் வலியானு தெரியல.ஏதோ கெட்டது நடக்கப் போகுதுன்னு எனக்குத் தோணுது.அதுதான் ஏதோ எச்சரிக்கை கொடுக்குதுன்னு தோணுது” என்று உருக்கமாக வசனம் பேசி இருக்கிறார்.

அவர் பேசிய நேரமோ என்னவோ தெரியவில்லை அந்த வசனம் அவருக்கு பலித்து விட்டது.
அவர் பேசிய வசனம் குறித்த வீடியோவையும் அவரின் மரணத்தையும் ஒப்பிட்டு பார்த்து தற்பொழுது ரசிகர்கள் தங்களின் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.அவருடன் பணியாற்றிய திரை பிரபலங்கள்,எதிர்நீச்சல் தொடரில் நடித்து வரும் நடிகர்,நடிகைகள் அனைவரும் மாரிமுத்துவின் குணத்தைப் பற்றி தெரிவித்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.