நான் ஆளும் கட்சியை சேர்ந்தவன் இப்படித்தான் இருப்பேன்!! திமுக கவுன்சிலரின் அடாவடி!!

Photo of author

By CineDesk

நான் ஆளும் கட்சியை சேர்ந்தவன் இப்படித்தான் இருப்பேன்!! திமுக கவுன்சிலரின் அடாவடி!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதிக்கு உட்பட்டது பண்ணப்பட்டி கிராமம். இது ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது. இந்த ஒன்றியத்தில் பண்ணப்பட்டி பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக சுமார் 4,50,000 பணத்தொகை ஒதுக்கி டெண்டர் ஏலம் விடப்பட்டது.

இப்பணி இன்று தி.மு.க. கவுன்சிலர் பிரம்மசாமி மேற்பார்வையில் தொடங்கியது. ஆரம்பித்த ஒரு சில மணி நேரத்திலேயே பணி முடிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த மக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

இதில் வேறு சில பணியாளர்களான ஊராட்சி ஒன்றிய பொறியாளர் மற்றும் அரசு அதிகாரிகள் என யாரும் கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே இருந்த கழிவுநீர் வாய்க்காலை தோண்டி அதில் உள்ள கற்களை கழிவுநீர் வாய்க்கால் கைப்பிடி சுவர் அமைப்பதற்காக காங்கிரீட்டுடன் சேர்த்து கொட்டுகின்றனர்.

வாய்க்காலில் உள்ள கற்கள் தெரியாத வகையில் தரமற்ற முறையில் காங்கிரீட் கொட்டுவதை பார்த்த மக்கள் கவுன்சிலர் பிரம்மசாமி-யிடம்கேள்வி எழுப்பினர்.
இதற்கு நான் ஆளும் கட்சியை சேர்ந்தவன் இப்படித்தான் செய்வேன் என்று அலட்சியமாக கூறி விட்டு பணி நடக்கும் இடத்தில் நாற்காலியில் அமர்ந்து அதிகாரம் காட்டுவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆத்தூர் தொகுதி தி.மு.க. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி யின் தொகுதியாகும். ஊரக வளர்ச்சித்துறை நிதியிலேயே இந்த ஒன்றிய கவுன்சிலர் செய்யும் அலட்சியம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு தரமற்ற முறையில் கழிவுநீர் வாய்க்கால் பணி செய்வது நாளடைவில் மக்களுக்கு பெரும் ஆபத்தில் முடிய வாய்ப்பிருக்கிறது.