ஏப்ரல் 19ஆம் தேதி அன்று உலக கல்லீரல் தினம் கொண்டாடப்பட்டது. 2025 ஆம் ஆண்டு உலக கல்லீரல் தினத்திற்கான கருப்பொருளாக உணவே மருந்து அமைக்கப்பட்டது. உடலினுடைய ஆரோக்கியத்திற்கு கல்லீரல் ஆனது மிகவும் முக்கிய பங்கு வகிப்பதோடு வளர்ச்சி துறை மாற்றம் செரிமானம் நச்சு நீக்கம் ஊட்டச்சத்து சேமிப்பு போன்ற பல்வேறு இயக்கங்களுக்கு கல்லீரல் தன்னுடைய பங்கினை கொடுக்கிறது.
நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கட்டாயமாக கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படிப்பட்ட டெல்லியில் உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு கல்லீரல் மற்றும் பெத்த நீர் அறிவியல் நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு தன்னுடைய வாழ்வில் மேற்கொள்ளக்கூடிய வழிமுறைகள் மற்றும் இன்சுலினை தன்னுடைய உடம்பிலிருந்து முழுவதுமாக அகற்ற தன் மேற்கொண்ட வழிமுறைகள் என அனைத்தையும் தெரிவித்து இருக்கிறார்கள்.
அதன்படி, இந்தியாவில் இருக்கக்கூடிய இளைஞர்கள் கட்டாயமாக தங்களுடைய ஆரோக்கியத்தில் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்ததோடு இவ்வாறு கவனம் செலுத்துவதால் 40 முதல் 50 ஆண்டுகள் வரை வாழ்ந்து நாட்டினுடைய முன்னேற்றத்திற்கு தங்களுடைய பங்களிப்பை வழங்க முடியும் என அவர் தெரிவித்திருக்கிறார்.அதிலும் குறிப்பாக எந்தவித இன்சுலின் மருந்தும் எடுத்துக் கொள்ளாமல் தன்னுடைய வாழ்வில் இன்சுரனை முழுவதுமாக நீக்கிவிட்டதாகவும் அதற்காக தனது உணவு முறையை மாற்றியதாகவும் தூக்க நேரத்தை அதிகரித்ததாகவும் அது மட்டுமல்லாத தினமும் உடற்பயிற்சி செய்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
நம் உடலுக்கு தேவையான அளவு தூக்கம் தண்ணீர் உணவு வழக்கமான உடற்பயிற்சி இவை அனைத்தையும் சரிவர கொடுத்து வரும் நிலையில் நம் உடலில் எந்த விதமான பிரச்சனைகளும் ஏற்படாது என தெரிவித்ததோடு கட்டாயமாக இரண்டு மணி நேர உடற்பயிற்சியும் 6 மணிநேர உறக்கமும் அவசியம் என தெரிவித்திருக்கிறார். இது தன்னுடைய சொந்த அனுபவம் என அவர் குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.