இனிமேல் இப்படிதான்! புகையிலைப் பொருட்களை விற்றால் கடை இழுத்து மூடப்படும்!
சேலம் பட்டைக்கோவில் அருகே உள்ள ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மூலாராம் என்பவர். இவர் சுய தொழிலாக மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கடைக்கு வந்து செல்வதுண்டு. சில நேரங்களில் கடைகளில் கூட்டம் அலைமோதி காணப்படும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்த கடையில் தான் பொருட்களை வாங்கி செல்வார்கள்.
ஏற்கனவே இந்த கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டவுன் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் குட்கா விவகாரத்தில் அவருடைய மகன் ஜெயராமை சமீபத்தில் சிலர் மர்மம் தெரியாத கும்பல் அவரை கடத்திச் சென்றுள்ளனர். இது தொடர்பாக டவுன் போலீசார் விசாரணை நடத்தி கடத்தப்பட்ட ஜெயராமை மீட்டனர். இதில் சம்பந்தப்பட்ட ராஜஸ்தானை சேர்ந்த மூணு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் அந்த கும்பலிடம் இருந்து மீக்கப்பட்ட ஜெயராம் வேறு ஒரு வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. எனவே அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது. இந்நிலையில் மூலாராமின் மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை விற்றதாக அவரது கடைக்கு நேற்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். பின்னர் மளிகை கடை அனைத்திற்கும் சென்று காவல்துறையினர் தொடர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.