நடிகர் மணிவண்ணன் அவர்கள் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தருணத்தில் பாரதிராஜாவினுடைய நிழல்கள் திரைப்படத்திற்கு மணிவண்ணன் அவர்கள் கதை கூறியுள்ளார். மேலும் அந்த திரைப்படத்திற்கு பாடல் ஒன்றையும் மணிவண்ணன் அவர்கள் இயற்றியதாகவும் அந்த பாடலுக்கு தன்னுடைய பெயரை போடாமல் வாலி அவர்களுடைய பெயரை போடுமாறு வலியுறுத்தி இருக்கிறார்.
இவர் முதன் முதலில் பாரதிராஜா உடைய கிழக்கே போகும் ரயில் படத்தினை பார்த்துவிட்டு பாரதிராஜா அவர்களுக்கு 16 பக்கத்தில் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியிருக்கிறார். அதைப் படித்த பாரதிராஜா அவர்கள் உடனே தனக்கு உதவியாளராக வந்து சேர்ந்து கொள்ளும்படி கூறி சேர்த்துக் கூறி சேர்த்துக் கொண்டாராம். ஒரே ஒரு கடிதத்தில் சினிமாக்கள் எளிமையாக மற்றும் வேகமாக நுழைந்தவர் மணிவண்ணன்.
இவர் பாரதிராஜாவிற்கு எழுதி கொடுத்த முதல் கதையான நிழல்கள் திரைப்படம் வெற்றி பெறாத நிலையில் இவரை வைத்து வெற்றி படம் கொடுப்பேன் என முடிவு செய்த பாரதிராஜா அவர்கள் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதற்கு கதை மட்டும் இன்றி வசனத்தையும் மணிவண்ணன் அவர்களே எழுதியுள்ளார். இத்திரைப்படமானது பட்டி தொட்டி எங்கும் வெற்றி பெற்ற நிலையில் பாரதிராஜாவின் சபதமும் நிறைவேறியது. அலைகள் ஓய்வதில்லை திரைப்படமானது மணிவண்ணனின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்திக் மற்றும் நடிகை ராதா இருவருக்கும் இத்திரைப்படம் அறிமுக திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.