புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கு இது கட்டாயம்!! வெளியான முக்கிய அறிவிப்பு!!
தற்போது நாடு முழுவதும் பாஸ்போர்ட் பெறுவதற்கு ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு போன்ற முக்கிய ஆவணங்கள் தேவைப்படுகிறது. எனவே, புதிய பாஸ்போர்ட் பெற விரும்புபவர்கள் www.passportindia.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உஅள்ளது.
இந்த மத்திய அரசின் இணையதளத்தில் புதிய பாஸ்போர்டிற்கு விண்ணப்பித்த முப்பதே நாட்களில் பெற்றுக் கொள்ள முடியும்.
அந்த வகையில், தற்போது புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அவரவரின் பிறப்பு சான்றிதழ் போன்ற முக்கிய ஆவணங்கள் தேவைப்படும்.
இந்த நிலையில், தற்போது புதிய பாஸ்போர்ட் வாங்குபவர்களுக்கான முக்கியமான அறிவிப்பு ஒன்றை பாஸ்போர்ட் மண்டல் அலுவலகம் கூறி உள்ளது. அதாவது புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கான ஆவணங்கள் குறித்து பதிவேற்றம் செய்ய டிஜி லாக்கர் என்ற நடைமுறையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேப்போல, ஆன்லைனில் புதிய பாஸ்போர்டிற்கு விண்ணப்பிக்கும் போதும் இந்த டிஜி லாக்கரை பயன்படுத்தி ஆவணங்களை பெற்றுக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக பாஸ்போர்ட் அமைச்சகம் கொண்டு வந்துள்ளது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
எனவே, புதிய பாஸ்போர்ட் பெற இந்த டிஜி லாக்கரை பயன்படுத்தி ஆவணங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்று இதன் மூலம் கூறப்படுகிறது. இதனால் அனைவரும் பயனடைவார்கள் என்றும் எதிர்பார்க்கபடுகிறது என்று பாஸ்போர்ட் அமைச்சகம் கூறி உஅள்ளது.