தமிழ் சினிமா துறையில் கொடி கட்டி பறந்த நடிகை ஜெயலலிதா அவர்கள் தமிழ் சினிமாவில் இருந்து தெலுங்கு மற்றும் கன்னட திரை உலகிற்கு சென்ற பொழுது அங்கு நடிகர் சோபன் பாபு மீது பற்று கொண்டு நட்பு பாராட்டியுள்ளார்.
1980-ம் ஆண்டு சோபன் பாபு – ஜெயலலிதாவை இணைத்து மும்பையில் இருந்து வெளியான ஸ்டார் அண்ட் ஸ்டைல் ஏடு ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. இதற்கு பதிலளித்து ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தை குமுதம் வார இதழ் 1980-ல் மொழிபெயர்த்து வெளியிட்டது. இதை பின்னாளில் திமுகவின் முரசொலி நாளேடும் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
1980 ஆம் ஆண்டு குமுதம் இதழுக்கு ஜெயலலிதா அளித்த பேட்டி :-
குமுதம் நிருபர் , சோபன்பாபுவிற்கும் உங்களுக்கும் இடையேயான உறவு என்ன ? என்று கேட்டதற்கு ஜெயலலிதா அவர்கள், நானும் அவரும் கணவன் மனைவியாக குடும்பம் நடத்துகிறோம் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இது தொடர்பாக கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் நம்ப முடியாதவையாய் இருந்தாலும் அதுவே உண்மை.
எங்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. ஆனாலும் நாங்கள் இருவரும் கணவன் மனைவியாக தான் வாழ்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணமாக, சோபன் பாபுவின் உடைய மனைவியையும் அவருடைய இரு குழந்தைகளையும் காரணமாக கூறியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதாகவே உள்ளது.
ஏற்கனவே திருமணம் ஆன ஒருவரை ஏன் காதலிக்க வேண்டும் என்ற கேள்விக்கு ஒவ்வொரு பெண்ணிற்கும் தனக்கென ஒரு தனி ஆண் வேண்டுமென தான் நினைப்பார்கள். ஆனால் சோபன்பாபுவை பார்த்தவுடன் என் மனதிற்கு பிடித்து விட்டது. அது என்னுடைய தவறோ அல்லது சோபன்பாபு தவறோ கிடையாது. இதற்காக அவர் அவருடைய மனைவியை விவாகரத்து செய்து என்னை திருமணம் செய்து கொள்ள எந்தவிதமான அவசியமும் கிடையாது. ஏனெனில் சோபன்பாபுவின் உடைய மனைவி எந்தவித தவறையும் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த காரணங்களுக்காகத்தான் நானும் சோபன்பாபுவும் திருமணம் செய்து கொள்ளாமல் தனி குடுத்தனம் எடுத்து கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறோம் என்று தெரிவித்ததோடு மட்டுமின்றி எங்களுடைய உறவு கோயிங் ஸ்டடி போன்றது என்றும் பெய்தளித்திருக்கிறார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்.