என் மகனுடைய புது பொண்டாட்டி இதுதான்!! உதயநிதி குறித்து ஸ்டாலினின் வெளிப்படை பேச்சு!!
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் அதற்கான ஆயத்த பணிகளை விறுவிறுப்பாக செய்து வந்தது. அந்த வகையில் அரசியலை செய்ய மாட்டோம் என்று கூறியவர் தனது மகன் இருக்கு இளைஞர் அணி தலைவர் பதவி கொடுத்து, சேப்பாக்கம் தொகுதியையும் ஒதுக்கினார்.
இந்நிலையில் ஓர் தொகுதி இவருக்கு கிடைத்ததும் அங்குள்ளவர்களுக்கு தேர்தல் ஆரம்பிக்கும் முன்பிலிருந்து அவர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து கொடுத்து வந்தார். தற்பொழுது ஓர் பிரபலமிக்க ஓர் யூடியூப் பக்கத்திற்கு உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவரது அப்பா ஸ்டாலின் அவர்கள் தன்னை பற்றி அமைச்சர்களிடம் விமர்சனம் செய்தது குறித்து பகிர்ந்துகொண்டார்.அதில் அவர் கூறியதாவது, நான் தேர்தலில் நிற்பதற்கு முன்பாகவே எனது தொகுதியில் இறங்கி பல வேலைகளை செய்து வந்தேன்.
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் எனது தொகுதியில் உள்ள அனைவருக்கும் எது கேட்டாலும் கிடைக்கும் என்ற அளவிற்கு சலுகைகள் கொடுத்து வந்தேன். இதனைப் பார்த்த மற்ற அமைச்சர்கள் எனது அப்பாவிடம் உங்களது பிள்ளை உங்களுக்கு டப் கொடுத்து விடுவார் போல என்று கூறியுள்ளனர்.
இதற்கு எனது அப்பா, புது பொண்டாட்டி இது, அதனால் சிறிது காலத்திற்கு அப்படித்தான் இருக்கும் என்று கூறியுள்ளார். இதனை உதயநிதி தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளிக்கும் போது தனது அப்பா இவ்வாறு என்னை விமர்சித்தார் என்று வெளிப்படையாக கூறினார்.
ஒரு சில நெட்டிசன்கள் இந்த வீடியோவின் கமென்ட் பாக்ஸில், புதிய பொண்டாட்டி பழைய பொண்டாட்டியாக மாறியதும் கண்டுகொள்ளாமல் மக்களை அப்படியே விட்டு விடுவீர்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.