ஆலயத்திற்கு மேலே இதற்கு தடை!! சாஸ்திரத்திற்கு எதிரானதால் பக்தர்கள் கவலை!!
ஆந்திரா என்றாலே அனைவருக்கும் தெரிந்தது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான். இங்கு தினமும் கோடிக்கணக்கான மக்கள் பெருமாள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர்.
தற்போது திருப்பதியில் ஆலயத்திற்கு மேலே ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் எதுவும் பறக்க கூடாது என அறிவிக்க வேண்டி திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த கோவிலுக்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்கள் அதிகமாக இருப்பதால் 24 மணி நேரமும் துப்பாகியுடன் படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் ஆலயத்திற்கு மேற்பகுதியில் ராணுவ பயிற்சி விமானங்களும், ஹெலிகாப்டர்களும் பறந்து செல்வதை தடை விதிக்க கோரி மத்திய அரசுக்கு திருப்பதி தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த விமானத்துறை அதிகாரிகள் ஆலயத்தின் மேலே விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக கருதப்படவில்லை என்றும், காற்றின் வேகத்தை பொறுத்து விமானத்தின் பாதை மாற்றப்படும் எனவும் கூறியது.
மேலும் ரேணிகுண்டாவில் உள்ள மத்திய விமான நிறுவனத்திடம் இதை தெரிவித்தால் பரிசீலனை செய்யப்படும் என கூறியது. கடந்த ஆண்டிற்கு முன்பு கடப்பாவில் புதிய விமான நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது.
இதனால் பெங்களூரில் இருந்து வருகின்ற விமானங்கள் ரேணிகுண்டா வந்து பிறகு அங்கிருந்து கடப்பா செல்லும் வழியில் திருப்பதி கோவிலின் மேலே பறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இதன் காரணமாக கோவிலின் மேலே விமானங்கள் பறந்து செல்கிறது என்று விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே ஆலயத்திற்கு மேற்பகுதியில் விமானங்கள் பறப்பது ஆகம சாஸ்திரத்திற்கு எதிரானது என பக்தர்கள் கூறியதாக கூறப்படுகிறது.