ஆன்லைனில் டிக்கெட் எடுக்கும் பொழுது இதை கட்டாயம் கவனிக்க வேண்டும்!! தெற்கு ரயில்வே எச்சரிக்கை!!

Photo of author

By Gayathri

ஆன்லைனில் டிக்கெட் எடுக்கும் பொழுது இதை கட்டாயம் கவனிக்க வேண்டும்!! தெற்கு ரயில்வே எச்சரிக்கை!!

Gayathri

ஆன்லைனில் டிக்கெட் எடுக்கக்கூடிய ரயில் பயணிகள் யூ டி எஸ் ஆப்ஸ் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் பின்பற்றவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

 

பொதுவாக யூ டி எஸ் ஆப்சை பயன்படுத்தி இரண்டு முறைகளில் டிக்கெட்டை பெறலாம் என்றும் ஒன்று காகித வடிவிலான டிக்கெட் என்றும் மற்றொன்று ஆன்லைன் வடிவிலான டிக்கெட் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஆன்லைன் வடிவிலான டிக்கெட்டை பொருத்தவரையில் நேரடியாக ரயில்களில் பயணம் செய்யலாம் என்றும் டிக்கெட் பரிசோதகர் கேட்கும் பொழுது மொபைல் மூலமாகவே டிக்கெட் காட்டி விடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் காகித வடிவிலான டிக்கெட் தான் பெரும்பாலான தேர்வு செய்வதாகவும் அப்படி தேர்வு செய்து ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து நேரடியாக ரயிலில் ஏறி விடுவது தவறான காரியம் என்றும் ரயில்வே துறை எச்சரித்து இருக்கிறது.

 

காரணம் இது காகித வடிவிலான டிக்கெட் என்பதால் ரயில்வே நிலையத்திற்கு வந்தவுடன் டிக்கெட் கவுண்டரை அணுகி காகித வடிவிலான டிக்கெட்டை பெற்ற பின்பு தான் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றும் இதை மீறக்கூடியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பலர் யு டி எஸ் ஆப்புகளால் டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது அதில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கவனிப்பதில்லை என்றும் அதுபோன்ற விதிமீறல்கள் ஈடுபடுபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.