ரேஷன் கடைகளில் இனி அரிசிக்கு பதில் இதுதான்!! தமிழக அரசின் அதிரடி முடிவு!!

Photo of author

By Gayathri

மாநில அளவிலான உணவு திருவிழா திண்டுக்கல்லில் நடைபெற்ற பொழுது உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் சிறுதானிய உணவுகள் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்திருக்கிறார்.

உணவு பொருள் வளங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் பேசியிருப்பதாவது :-

தற்பொழுது நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உணவுப்பொருட்கள் அரிசிக்கு பதிலாக வழங்கப்பட்டு வருவதாகவும் அதிலும் குறிப்பாக கேழ்வரகு அரிசிக்கு பதிலாக கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த திட்டமானது தற்பொழுது பரிசோதனை முறையில் நடைபெற்று வருவதாகவும் தமிழக அரசு மக்களினுடைய ஆரோக்கியத்தையும் உணவு முறையையும் மேம்படுத்த இந்த திட்டத்தினை செயல்படுத்த இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அதிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு தான் தமிழ்நாட்டில் சிறு தானியங்களின் உடைய பயன்பாடு ஆனது அதிகரித்து இருக்கிறது என்றும் இந்த சிறுதானியங்களை அரசிக்கு பதிலாக 2 கிலோ கேழ்வரகாக வழங்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த சிறு தானியம் ஆனது நேரடியாக தர்மபுரி கிருஷ்ணகிரி செயலும் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டத்திலுள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுவதாகவும் கூடிய விரைவில் இதனை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யும் அளவிற்கு உற்பத்தியை உயர்த்த கூடும் என்றும் அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் பேசியிருப்பதாவது :-

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரக்கூடிய 37 ஆயிரம் நியாய விலைக் கடைகள் மூலம் மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்படுவதாகவும் இந்த நியாய விலை கடைகளில் வேலை பார்க்கக்கூடிய விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்கள் அவர்களுடைய பணியை சிறப்பாக செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.