இன்று பலருக்கும் பிடித்த பேவரைட் உணவுகளில் டாப் ஒன் இடத்தில் பிரியாணி இருக்கின்றது.சுவை மற்றும் மணம் இரண்டிலும் பிரியாணியை அடித்துக் கொள்ள முடியாது.சிக்கன்,மட்டன்,பிஸ்,எக்,காளான்,காய்கறி பிரியாணி என்று பலவிதமான பிரியாணி செய்து சாப்பிடப்படுகிறது.
இதில் அனைவரின் பேவரைட்டாக சிக்கன் பிரியாணி இருக்கின்றது.அசைவ உணவுகளின் ராஜா என்றால் அது சிக்கன் பிரியாணிதான்.சிக்கன் சுவை மிகுந்த ஒரு அசைவமாகும்.சிலர் தினமும் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.சிலர் நள்ளிரவு நேரத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.நள்ளிரவு நேரத்தில் சிக்கன் பிரியாணி மட்டும் இல்லை எந்த உணவுகளை சாப்பிட்டாலும் அவை ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.
அதேபோல் மட்டன் பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.மட்டனில் புரதம்,கால்சியம்,கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கிறது.மட்டனில் சத்துக்கள் இருக்கிறது என்றாலும் அதை அளவாக சாப்பிடுவதுதான் நல்லது.மட்டனில் ஏற்கனவே கொழுப்புச் சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது.
மட்டன் பிரியாணியை அதிகமாக சாப்பிட்டால் இரத்த அழுத்தம்,இரத்தக் கொதிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.எனவே மட்டன் பிரியாணியையும் குறைவான அளவே எடுத்துக் கொள்ள வேண்டும்.சிலருக்கு மீன்,முட்டை,காளான் போன்றவற்றில் பிரியாணி செய்து சாப்பிடுவது பிடித்தமான விஷயமாக இருக்கும்.ஆனால் இவையும் உடல் ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.முட்டையின் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு வெள்ளைக்கருவை கொண்டு பிரியாணி செய்து சாப்பிடலாம்.
கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்களுக்கு காய்கறிகளை கொண்டு செய்யப்படும் வெஜ் பிரியாணிதான் பெஸ்டாக இருக்கும்.காய்கறிகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகும்.இந்த காய்கறிகளை வைத்து பிரியாணி செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.பிரியாணி சாப்பிட தோன்றினால் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் வெஜ் பிரியாணி செய்து சாப்பிடலாம்.