இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியிலும் வழக்கம் போல தொடக்கம் முதலாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினார். அதன் காரணாமாகவே இந்திய அணி ரன் சேர்க்க முடியாமல் திணறி வருகிறது.
நேற்று தொடங்கிய இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார், கே எல் ராகுல் 4 ரன்களிலும், அடுத்தடுத்து களமிறங்கிய சுப்மன் கில் 20 ரன்களிலும், விராட் கோலி 17 ரன்களிலும், ரிஷப் பண்ட் 40 ரன்களிலும், ஜடேஜா 26 ரன்களிலும், மேலும் நிதீஷ் ரெட்டி டக் அவுட் ஆனார். இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்கள் அடித்தது.
அடுத்து முதல் இன்னிங்ஸில் களமிரங்கிய ஆஸ்திரேலிய அணி 181 ரன்களில் ஆல் அவுட் ஆனது. மேலும் இந்திய அணி அடுத்து களமிறங்கியது இதிலும் டாப் ஆர்டர் சொதப்பியது. தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் 22 ரன்ளிலும், கே எல் ராகுல் 13 ரன்களிலும் அடுத்து களமிறங்கிய வீரர்களான கில் 13 ரன்களிலும்,விராட் கோலி 6 ரன்களிலும் , நிதீஷ் ரெட்டி 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்நிலையில் பண்ட் அதிரடியாக விளையாடி 61 ரன்கள் சேர்த்தார். தற்போது ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் களத்தில் 141 ரன்களுடன் நாளை விளையாட உள்ளனர்.தொடர்ந்து டாப் ஆர்டர் சொதப்பி வருகிறது இந்திய அணியின் முக்கிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.