தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான தொகுதி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. 2026 சட்டசபை தேர்தலுக்கான ஆலோசனைகளை கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் துவங்கி விட்டதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் வேகமாக நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களுக்கு 20% வாக்கு வங்கி இருப்பதாகவும் அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் இணைந்தால் வாக்கு வங்கி மொத்தம் 60 லிருந்து 70% ஆக இருக்கும் என்றும் இதனை தவெக வால் மட்டுமே 60 சதவிகிதத்திற்கும் கீழ் குறைக்க முடியும் என விஜய்யை சந்தித்த பொழுது பிரசாந்த் கிஷோர் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியை காண வேண்டும் என கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் வியூகம் வகுத்து வருவதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் வேகமாக நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதற்காக இக்கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் பிரசாந்த் கிஷோர் அவர்களை சிறப்பு ஆலோசகராக தேர்தல் வரை வைத்துக் கொள்ளப் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இக்கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் போட்டியிடப் போகும் தொகுதி குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கட்சியின் மீட்டிங்கில் இது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டதாகவும் விஜய் போட்டியிடக்கூடிய தொகுதி அவருக்கு சாதகமாக உள்ளதா என சர்வே எடுக்கும்படி கட்சி நிர்வாகிகளுக்கு கட்சியின் தலைவர் உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
சர்வேயின்படி நாகப்பட்டினத்தில் போட்டியிட விஜய் திட்டமிட்டு இருப்பதாகவும் கடலோர மாவட்டமான நாகப்பட்டினம் ஒருவேளை விஜய் அவர்களுக்கு தேர்வாகவில்லை என்றால் இரண்டாவது பட்சமாக தர்மபுரியில் போட்டியிடுவது குறித்த ஆலோசனையும் நடந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருடைய முதல் தேர்வாக நாகப்பட்டினம் உள்ளது என்ற தகவலும் கிடைத்திருக்கிறது.