யுபிஐ மூலம் இந்தியாவுடன் இணையும் நாடு இதுதான்! எளிதில் பணம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டில் ரூபாய் நோட்டிற்கு சமமாக டிஜிட்டல் ரூபாய் ரிசர்வ் வங்கி வெளியிடும் என்று 2022-2023 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தெரிவித்திருந்தார். தற்போதுள்ள சூழ்நிலையில் பணம் என்பது பேப்பர் வடிவில் இருந்தாலும் நாணய வடிவில் இருந்தாலும் அதற்கென தனி மதிப்பு உண்டு.
மேலும் பேப்பர் மற்றும் நாணய வடிவில் பணத்தை எப்படி மதிப்பிடுகின்றமோ அதேபோல் டிஜிட்டல் கோட் மூலம் உருவாக்குவது டிஜிட்டல் நாணயங்கள் அல்லது டிஜிட்டல் கரன்சி என கூறப்படுகிறது.இந்த டிஜிட்டல் நாணயத்தை அரசாங்கம் மட்டுமின்றி தனியார் நிறுவனக்களும் தாயரித்து வருகின்றது.இந்த டிஜிட்டல் கரன்சியானது நவம்பர் 2ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி மற்றும் சிங்கப்பூர் மத்திய வங்கி இணைந்து இருநாட்டின் யுபிஐ மற்றும் பே-நவ் ஆகிய செயலிகள் மூலம் பணம் பரிமாற்ற அமைப்புகளை இணைப்பதற்கான திட்டத்தை தொடங்கியுள்ளது.மேலும் இதன்மூலம் இந்தியா -சிங்கப்பூர் இடையே குறைந்த செலவில் உடனடியாக பணம் பரிமாற்றம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அதிகம் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூர் அதன் பே-நவ் பணப் பரிமாற்ற அமைப்பை யுபிஐ யுடன் இணைக்கும் திட்டமானது அடுத்த சில மாதங்களில் நிறைவடையும்.அவை முழுமையாக நிறைவு பெற்றவுடன் பிரதமர் மோடி இது குறித்து அறிவிப்பை வெளியிடுவார்.அதற்கு பின்பு சிங்கப்பூரில் உள்ளவர்கள் இந்தியாவில் உள்ளவர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.