ரஜினிக்கும் தனுசுக்கும் உள்ள வித்தியாசம் இது தான்! நாகர்ஜுனா ஓபன் டாக்!

தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டாராக வளம் வருபவர் நாகர்ஜுனா. இவர் தற்போது நடிகர் ரஜினியுடன் கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். அதேபோல தனுசுடன் குபேரா படத்தில் நடித்து முடித்துள்ளார். குபேரா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றாலும் நாகர்ஜுனா மற்றும் தனுஷின் நடிப்பை எல்லோரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

அண்மையில் தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் நடிக்கும்போதும், படப்பிடிப்பு தளத்திலும் எப்படி நடந்து கொள்வார்கள் என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டனர். தனுஷ் மற்றும் ரஜினி எப்போதும் படப்பிடிப்பு தளத்தில் அந்த கதாப்பாத்திரமாவே மாறிடுவாங்க. தனுஷ் கொஞ்சம் வித்தியாசமானவர். படப்பிடிப்பு தளத்தில் யாரிடமும் பேச மாட்டார். யாராவது அவரிடம் சென்று பேசினால் பேசுவார். மற்ற எல்லா நேரங்களிலும் அந்த கதாப்பாத்திரமாகவே தனுஷ் மாறிவிடுவார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆக்சன் காட்சிகளில் நடிக்கும்போது யாரிடமும் பேசமாட்டார். மற்ற எல்லா நேரங்களிலும் எல்லோரிடமும் சகஜமாக பேசுவார். இவங்க ரெண்டு பேரும் எனக்கு ரொம்ப வித்தியாசமா தெரிஞ்சாங்க. ஏன்னா நான் எப்போதும் படப்பிடிப்பு தளத்தில் எல்லாரிடமும் சகஜமாக ஜாலியா பேசிக்கிட்டே இருப்பேன் என பேட்டி கொடுத்துள்ளார் நாகார்ஜூனா.