பெண்களுக்கு வாழ்நாளில் மகிழ்ச்சி தரக் கூடிய ஒரு விஷயம் என்றால் அது தாய்மை உணர்வு தான்.திருமணமான தம்பதிகள் ஒவ்வொருவரும் தங்கள் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.சிலர் சில காரணங்களுக்காக கருவுறுதலை தள்ளிப் போடுகின்றனர்.சிலருக்கு தைராய்டு,சினைப்பை நீர்க்கட்டி போன்ற காரணங்களால் கருவுறுதல் நடைபெறுவது தள்ளிப்போகிறது.
இதற்கு மருத்துவத் துறையில் தற்பொழுது உரிய சிகிச்சைகள் வந்துவிட்டது.குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடும் தம்பதிகள் சில விஷயங்களை நிச்சயம் கவனிக்க வேண்டும்.பெண் தன்னுடைய மாதவிடாய் காலத்தில் இருந்து 12 நாட்கள் கழித்து துணையுடன் இணைந்தால் கருத்தரிக்க அதிக வாய்ப்பிருக்கிறது.12வது நாள் முதல் 20வது நாளுக்குள் உடலுறவு கொண்டால் கருத்தரிப்பு சாத்தியமாகும்.அதுவே 21 முதல் 25வது நாளுக்குள் இணைந்தால் கருத்தரிப்பதற்கான சாத்தியம் குறைவாக இருக்கும்.
தம்பதிகள் இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடுகிறீர்கள் என்றால் நிச்சயம் சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.முதல் குழந்தை பிறந்து இரண்டு வருடங்கள் ஆனப் பிறகே இரண்டாவது குழந்தைக்கு திட்டமிட வேண்டும்.குறைந்தபட்சம் 18 மாதங்கள் நிறைவைடைந்திருக்க வேண்டும்.
முதல் குழந்தை பிறந்து 6 மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் கருவுற்றால் அது தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.குறைப்பிரசவம்,இரத்த சோகை,உடல் எடை குறைவு,ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
முதல் குழந்தை பெற்ற பொழுது அதீத இரத்தப் போக்கு ஏற்பட்டிருக்கும்.இதனால் பெண்ணின் உடல் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.எனவே முதல் குழந்தை பெற்ற போது சந்தித்த உடல் நலப் பிரச்சனைகள் அனைத்தும் சரியாக கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகலாம்.எனவே தம்பதிகள் இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடுகிறீர்கள் என்றால் இந்த விஷயங்களை நிச்சயம் கவனிக்க வேண்டும்.
சரியான நேரத்தில் இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடும் தம்பதிகள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.பெண்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.முதல் பிரசவத்தின் போது உங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது இருந்த அக்கறை மற்றும் கவனிப்பு இரண்டாவது பிரசவத்திற்கு இருக்க வேண்டும்.உரிய ஓய்வு,சத்தான ஆகாரம் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.