உங்கள் பாத அழகை கெடுக்கும் வெடிப்புகளை மறைய வைக்கும் மேஜிக் க்ரீம் இது!!

Photo of author

By Divya

உங்கள் பாத அழகை கெடுக்கும் வெடிப்புகளை மறைய வைக்கும் மேஜிக் க்ரீம் இது!!

ஆண்,பெண் அனைவரின் கால் பாதங்களில் வெடிப்பு ஏற்படுவது சாதாரண ஒன்று தான்.இதனால் கால் பாத அழகு கெட்டு விடும்.அதுமட்டும் இன்றி வெடிப்பு உள்ள இடங்களில் அரிப்பு,புண் போன்ற பாதிப்புகள் உருவாகி கடுமையான தொந்தரவுகளை ஏற்படுத்தும்.

எனவே கால் பாத வெடிப்பை முழுமையாக குணப்படுத்திக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய குறிப்பை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)அரிசி மாவு – 2 தேக்கரண்டி
2)பால் – 3 தேக்கரண்டி
3)வினிகர் – 2 தேக்கரண்டி
4)கல் உப்பு – 2 தேக்கரண்டி
5)மஞ்சள் தூள் – 2 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 3/4 பாகம் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.3 நிமிடங்களுக்கு சூடாக்கி அடுப்பை அணைக்கவும்.

இந்த நீரை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி 2 தேக்கரண்டி வினிகர் மற்றும் 2 தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து அதில் 5 நிமிடங்களுக்கு கால்களை ஊற வைக்கவும்.பிறகு ஒரு ஸ்க்ரப்பர் கொண்டு கால்களை நன்கு தேய்த்து சுத்தப்படுத்தவும்.

பிறகு கால்களை ஈரமில்லாமல் துடைத்து எடுத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு கிண்ணத்தில் 3 தேக்கரண்டி பால்,2 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 2 தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்து பேஸ்ட் போல் கலக்கி கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை கால் பாதங்களில் உள்ள வெடிப்புகளில் தடவி ஒரு ஸ்க்ரப்பர் கொண்டு தேய்த்து கழுவவும்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் பாதங்களில் உள்ள வெடிப்புகள் சில தினங்களில் மறைந்து விடும்.