அடுத்த முதல்வர் இவர்தான்! தனித்து போட்டியிடும் தலைவர்!

Photo of author

By Rupa

அடுத்த முதல்வர் இவர்தான்! தனித்து போட்டியிடும் தலைவர்!

புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.இந்நிலையில் அங்கு தொகுதி பங்கீடு பிரச்சனை நிலவி வந்தது.பா.ஜ.க மற்றும்.என்.ஆர். காங்கிரஸ் ,திமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றார்.இதை ஒப்புக்கொண்ட பா.ஜ.க அதிகார பூர்வமான தகவல்களை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வந்தது.இவர்கள் ஏன் காலம் தாமதம் செய்கிறார்கள் என ரங்கசாமிக்கு சந்தேகம் எழத் தொடங்கியது.

அப்போது தான் அவருக்கு தெரிய வந்தது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.க வில் தற்போது இணைந்துள்ள நமசிவாயத்தை முதல்வர் வேட்பாளருக்கு அறிவிக்க போவதாக தெரிய வந்தது.அதன் பிறகு முக்கிய கட்சி தொண்டர்களை அழைத்து ரங்கசாமி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.அதில் அனைவரும் ஒருமித்த கருத்தாக தனித்து போட்டியிடலாம் எனக் கூறினர்.

இவர்களின் அறிவிபைக் கண்டு பா.ஜ.க பொறுப்பாளர் மற்றும் அமைச்சருமான அர்ஜுன் ராம் மேகவால் மற்றும் இணை பொறுப்பாளர் சந்திர சேகர்.நிர்மல் குமார் ஆகியோர் புதுச்சேரி வந்து ரங்கசாமியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.அந்த பேச்சு வார்த்தையில் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் தொகுதி பங்கீட்டில் விட்டுக்கொடுக்க தயாராக உள்ளேன் என ரங்கசாமி கேட்டுக்கொண்டார்.

இதனைக்கேட்ட பா.ஜ.க பொருலாளர் நிர்மல் குமார் நீங்கள் அவசரப்பட்டு எந்த வித முடிவையும் எடுக்க வேண்டாம் எனக் கூறியுனார்.தலைமையிடம் கலந்து பேசி நல்ல முடிவை சொல்வதாக ரங்கசாமியிடம் கூறி  சென்றுள்ளார்.அதன் பின் பா.ஜ.க செயலாளர் செய்தியாளர்களை சந்தித்து கூறியது,என்.ஆர் காங்கிரஸ்.பா.ஜ.க கூட்டணியில் தான் இருக்கிறது.தற்போதய பேச்சு வார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது என இவ்வாறு கூறினார்.இதனையடுத்து பா.ஜ.க தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தி இவரையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முடிவு செய்தனர்.

அதனையடுத்து என்.ஆர்.காங்கிரசுக்கு 17 தொகுதிகள் என பிரித்தும் கொடுத்தனர்.அப்போதும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஒப்புக்கொள்ளவில்லை.என்.ஆர்.காங்கிரஸை பக்க பலமாக நினைத்த பா.ஜ.க வின் நிலை தற்போது ஆட்டம் கண்டுள்ளது.மக்களின் விருப்பத்திற்கினங்க  தனித்து போட்டியிடபோவதாக என்.ஆர்.ரங்கசாமி கூறிவருவதாக அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.